உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஓஹியோ கவர்னர் பதவிக்கு இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி போட்டி?

ஓஹியோ கவர்னர் பதவிக்கு இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி போட்டி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி,39, ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். அமெரிக்கா தொழிலதிபர் என்ற அந்தஸ்தில் இருந்து அரசியல்வாதியாக அடியெடுத்து வைத்துள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து, நிர்வாகத்தை சீர்திருத்தும் பணியை, அவரிடம் டிரம்ப் ஒப்படைத்துள்ளார்.இந்நிலையில், அவர் ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 2026-ல் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜன 19, 2025 07:26

மகா திறமைசாலி. அடுத்த ஜனாதிபதி இவர்தான் என்று பலர் அடித்துச்சொல்கிறார்கள்.


Duruvesan
ஜன 19, 2025 07:16

ஒரு ராமசாமி வந்து மொத்த திராவிடனுக்கும் விடியல் குடுத்தான், அதே ராமசாமி இப்போ அடுத்த பிறவியில் அமெரிக்கவுக்கு விடியல் குடுக்க போறாரு, ஆக திராவிடம் வென்றது என விடியல் கூவும், அடிமைகள் ஆனந்த கண்ணீர் விடும்


J.V. Iyer
ஜன 19, 2025 04:40

வெற்றிபெற வாழ்த்துக்கள்.


வல்லவன்
ஜன 18, 2025 22:13

இவர் இந்தியரே அல்ல. பார்பதற்கு இந்தியர் போல உள்ளார் அதற்கே இவ்வளவு பரவசம்


Mediagoons
ஜன 18, 2025 21:59

மற்ற நாடுகளுக்கு தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள், எந்த வம்சாவளியை சேர்ந்தவர்களாக ஒருந்தால் என்னே?


என்றும் இந்தியன்
ஜன 18, 2025 18:53

அந்த தேசத்தான் தான் இந்த மாதிரி போட்டியிட முடியும்


Premanathan S
ஜன 18, 2025 19:38

இதனால் இந்தியாவுக்கு ஆகப்போவது என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை