உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் கெத்து காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு

பாக்., வீரர்களுக்கு கை குலுக்காமல் கெத்து காட்டிய இந்திய வீரர்கள்: வெற்றியை ராணுவத்திற்கு சமர்பித்து பேச்சு

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கை குலுக்காமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது பலரையும் பாராட்ட வைத்துள்ளது. பாக்.,கை வீழ்த்திய பின்னர் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார், ''பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்'' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=udwjx59b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நிலவிவரும் அசாதாரண சூழல்நிலை காரணமாக இருநாடுகளும் நேரடியான விளையாட்டுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தன. உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டும் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே இரு அணிகளும் போட்டிகளை எதிர்கொண்டன. காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகளின் தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையேயான பகை இன்னும் அதிகரித்தது. இதனையடுத்து சமீபத்தில் நடந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ‛வேர்ல்டு சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்-2025' (WCL) கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என இந்திய முன்னாள் வீரர்கள் உறுதியாக இருந்ததால், அப்போட்டி ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.

கை குலுக்கல்

இந்த நிலையில், தற்போது நடந்துவரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (செப்.,14) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முன்னதாக இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி நேற்று போட்டி நடைபெற்றது. இரு அணிகளின் கேப்டன்களும் 'டாஸ்' போடுவதற்கு முன்னதாக கை குலுக்குவது வழக்கமான நடைமுறை. ஆனால், நேற்றைய போட்டியின்போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கவில்லை.பின்னர், 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் 9 விக்., இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவரிலேயே இலக்கை எட்டி, வெற்றிப்பெற்றது. வெற்றிக்குப் பிறகு ஆடுகளத்தில் இருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. அவர்கள் நேராக இந்திய அணியின் ஓய்வறைக்குச் சென்றார்கள்.

அதிர்ச்சி

மறுபுறம், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினர் கைகுலுக்குவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களின் செயலைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கை குலுக்கி செல்வது, கிரிக்கெட் விளையாட்டில் நாகரிகமான நடைமுறையாக இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் பாகிஸ்தானிடம் எந்த சமரசமும் இல்லை என்பது போல, இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.ஆசியக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னதாகவும், கேப்டனர்கள் அறிமுக நிகழ்ச்சியில், இந்திய கேப்டன் சூர்யகுமார், பாகிஸ்தான் கேப்டனுக்கு கை குலுக்கவில்லை. இதனால் உடனே மேடையை விட்டு கீழிறங்கி சென்றார் பாக்., கேப்டன் சல்மான் அகா. இந்திய அணியினர் கை குலுக்காமல் சென்றதால் அதிருப்தியில் இருந்த பாகிஸ்தான் கேப்டன், போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவை புறக்கணித்தார். அதில் எப்போதும் இரு அணி கேப்டன்களும் போட்டி குறித்து பேசுவர். அந்த நிகழ்விற்கு சல்மான் அகா வர மறுத்தார்.

ராணுவத்திற்கு சமர்ப்பிப்பு

ஆட்டத்திற்குப் பிந்தைய பேட்டியில் கை குலுக்காதது பற்றி பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார், ''பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்'' என்றார். பலரின் கோரிக்கையை தாண்டி போட்டியில் பங்கேற்றாலும், கை குலுக்காமல் தங்களது எதிர்ப்பை பதிவு செய்த இந்திய வீரர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புகார்

கை குலுக்கவில்லை என கூறி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கைக் ஹேஸ்சன் புகாரளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

ManiMurugan Murugan
செப் 15, 2025 23:39

ManiMurugan Murugan மக்கள் மனதில் காலத்தின் தாக்கம் இருப்பதால் எதிர்ப்பது நியாய மே உலக போட்டி என்று வரும் போது சிவன் கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியாது தான் இந்திய அணியினருக்கு பாராட்டுக்கள் கோப்பை வாங்கிக் கொண்டு வந்து இறந்தவர்களுக்கு காணிக்கை ஆக்குங்கள்


அப்பாவி
செப் 15, 2025 23:13

போய் விளையாடிட்டு வந்து ராணுவத்திற்கு சமர்ப்பணமாம்.


Barakat Ali
செப் 15, 2025 22:32

காசுக்காக விளையாடிவிட்டு, கை குலுக்காமல் தவிர்த்தது அநாகரிகமே .........


Suresh Velan
செப் 16, 2025 20:17

இந்திய இந்து மக்கள் எல்லாம் இது மாதிரி ஒரு எதிர்ப்பை வரவேற்கிறார்கள் . இந்திய முஸ்லிம்கள் தான் பாகிஸ்தான் என்ன செய்தாலும் பாகிஸ்தானுக்கு கழுவி ஊற்றி கொண்டிருப்பார்கள் .


Tamilan
செப் 15, 2025 20:06

நாகரீகமில்லாதவர்கள்


Tamilan
செப் 15, 2025 20:06

ஏணைக்கும் கோணைக்கும் முடிச்சு போடுவானேன் ?. ராணுவமும் விளையாட்டும் ஒன்றா ?.


பெரிய ராசு
செப் 15, 2025 21:13

ஆம்மதிட வாத்துமாண்டிய ..எம் தைத்திருநாட்டில் எல்லாம் ஒன்றுதான் உன்னமாதிரி தேசத்துரோகிக்கு எல்லாம் சரி , சோறு தின்பதற்கு இந்திய விசுவாசம் பன்றிஸ்தானுக்கு ...


spr
செப் 15, 2025 18:33

"இந்திய கேப்டன் சூர்யகுமார், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம். இந்த வெற்றியை ராணுவத்திற்கு சமர்ப்பிக்கிறோம்" - இவர்களைக் உரை சொல்லை பயனில்லை. கூலிக்கு மாரடிக்கும் கும்பல். வரும் காசுக்கு வாசலில் வரவேற்பவர்கள். ஆனால், இவர்களை உசுப்பி விட்டு "உங்கள் கடமையைச செய்யுங்கள்" என்று சொன்ன அந்த பிரபல கிரிக்கெட் வீரர் முதல் இவர்களைக் கட்டி மேய்க்கும் உள்துறை அமைச்சர் மகன் தலைமையில் இயங்கும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு நிர்வாக அமைப்பில் உள்ள அனைவருமே கண்டிக்காத தக்கவர்கள் இவர்களை அனுமதித்த மத்திய அரசின் விளையாட்டுத்துறை மற்றும் தடுக்க மறுத்த நீதி அமைப்புக்களும் கண்டிக்கத்தக்கவை ஆனால் மானமில்லாமல் விளையாடி விட்டு, காசு பார்த்த பின், ஆட்ட வெற்றியை ராணுவத்துக்குச் சமர்ப்பிக்கிறோம் என்று சொன்னது மக்களை ஏமாற்றும் செயல். வந்த காசை பயங்கர வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது போராடிய ராணுவ வீரர்களுக்கோ கொடுப்பார்களா அதுவல்லவா நேர்மை ஆனாலும் எல்லோருமாகப் பன்னாட்டு அரங்கில் இந்தியர்களுக்கு வெட்கம் மானம் இல்லை என்பதனை நிருப்பித்துவிட்டார்கள்


Vasan
செப் 15, 2025 16:29

30 அப்பாவி இந்தியர்களுக்கு தலையே போய் விட்டது. நீங்கள் கை கொடுத்தால் என்ன, கொடுக்கா விட்டால் என்ன? போட்டியில் விளையாடியது தவறு.


theruvasagan
செப் 15, 2025 16:13

இது எப்படி இருக்கு என்றால் கொஞ்சநாள் முன்பு சிலதுகள் பதக்கம் வாங்க ஆளுநர் உள்ள மேடையில் ஏறி இளிச்சிக்கொண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு பிறகு அவர் கையால் பட்டம் பதக்கம் வாங்க மாட்டோம்னு ரவுசு பண்ண மாதிரி இருக்கு.


beindian
செப் 15, 2025 15:52

ஆனால் வெட்கமேயில்லாமல் அவர்களுடன் விளையாடுவோம் ?


Suresh Velan
அக் 14, 2025 13:22

முக்கால் வாசி இந்திய மக்கள், முக்கால் வாசி பாகிஸ்தான் மக்கள், இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட வேண்டும், அதை ரசிக்க வேண்டும் என்று அலைகிறார்கள், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இந்தியா விளையாட சம்மதித்தது


SUBBU,MADURAI
செப் 15, 2025 15:43

பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றதற்கு ஆப்கானில் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு இந்திய வெற்றியை கொண்டாடும் வீடியோ வைரல்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை