உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய மாணவியிடம் நாடு கடத்துவதாக மிரட்டி பணம் பறிப்பு

அமெரிக்காவில் இந்திய மாணவியிடம் நாடு கடத்துவதாக மிரட்டி பணம் பறிப்பு

இண்டியானா: அமெரிக்காவில் உயர் கல்வி படித்து வரும் இந்திய மாணவியிடம், 'குடியேற்ற விதிகளை மீறியதற்காக நாடு கடத்த உள்ளோம்' என மொபைல் போனில் மிரட்டி, 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது.

கடும் கட்டுப்பாடு

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரேயா பேடி, 23. இவருக்கு அமெரிக்காவின் இண்டியானா பல்கலையில் கணினி பிரிவில் உயர்கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. அதற்காக எப்--- - 1 மாணவர் விசா பெற்று 2022ல் அமெரிக்கா வந்தார்.தற்போது அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு விதித்து வருகிறது. வெளிநாட்டு மாணவர்கள் எந்த போராட்டங்களிலும் பங்கேற்கக் கூடாது, வகுப்புகளை கட் அடிக்கக் கூடாது மீறினால், விசா ரத்தாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் மாணவி ஸ்ரேயா பேடியை மொபைல் போனில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். மேரிலாண்டைச் சேர்ந்த குடியேற்ற அதிகாரி என கூறி, தன் அடையாள அட்டையை அனுப்பி உள்ளார். அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை தளத்தில் உறுதி செய்யும்படி கூறியுள்ளார். மாணவி தேடிய போது அதே தகவல்கள் மற்றும் அழைப்பு வந்துள்ள தொடர்பு எண் குடியேற்ற துறை இணைய தளத்தில் இருந்தது.இதையடுத்து மாணவியிடம் பேசிய மர்ம நபர், 'குடியேற்ற விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்து, நாடு கடத்த உள்ளோம்' என மிரட்டியுள்ளார்.'அது நடக்காமல் இருக்க 4 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் பரிசு அட்டைகளை வாங்கி அதன் கூப்பன் எண்களை தெரிவிக்க வேண்டும். அது பிணைத் தொகையாக கருதப்படும். அவற்றை மறுநாள் அதிகாரிகள் வந்து பெற்றுச் செல்வர்' என கூறியுள்ளார்.

புகார்

இதை நம்பி 4 லட்சம் ரூபாய்க்கு ஆப்பிள் மற்றும் டார்கெட் நிறுவனத்தின் பரிசு அட்டைகளை ஆன்லைனில் வாங்கி, அதன் விபரங்களை மர்ம நபருக்கு மாணவி ஸ்ரேயா வழங்கினார்.ஆனால், மறுநாள் அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதன் பின்பே மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து இண்டியானா போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ