உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்ம மரணம்

இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்ம மரணம்

ஹைதராபாத் :தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அமெரிக்காவில் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.தெலுங்கானா வனபர்த்தி மாவட்டம் ஜி.தினேஷ் 22, என்ற மாணவர் மேற்படிப்புக்காக கடந்த ஆண்டு டிச. 28ல் அமெரிக்கா கனெக்டிகட் மாகாணத்துக்கு சென்றார்.சில நாட்களுக்கு பின் ஆந்திரா ஸ்ரீகாகுளம் மாவட்டம் நிகேஷ் 21, என்ற மாணவர் கனெக்டிகட் மாகாணத்துக்கு சென்றார். இவர்கள் நண்பர்களாகி அங்கு விடுதி ஒன்றில் ஒரே அறையில் வசித்து வந்தனர்.இந்நிலையில் தினேஷ் நிகேஷ் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பக்கத்து அறையில் வசிக்கும் தினேஷின் நண்பர் ஜன. 13ம் தேதி இரவு அவரது வீட்டுக்கு தெரிவித்தார். இதை கேட்ட தினேஷ் குடும்பத்தினர் கதறி அழுதனர். உயிரிழப்புக்கான காரணம் அவர்களுக்கு தெரியவில்லை.தினேஷின் உடலை அமெரிக்காவில் இருந்து தெலுங்கானாவுக்கு எடுத்து வர உதவும்படி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மாநில அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 17, 2024 00:27

அது ஏன் எப்பவும் தெலுகு பேசும் மாணவர்களே இப்படி இளம்வயதில் இறக்கின்றனர்? அமெரிக்காவில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிபேசுபவர்கள் உள்ளனர். மற்ற நாட்டவர்கள் உள்ளனர். ஆனால் இப்படி அதிகம் அல்பாசுசில் இறப்பது அநேகமாக தெலுகு மொழி பேசுபவர்கள்தான். அதுதான் ஏன் என்று புரியவில்லை.


g.s,rajan
ஜன 16, 2024 20:06

கறுப்பின மக்களின் தாக்குதலோ....???


Edwin Jebaraj, Tenkasi
ஜன 16, 2024 07:46

ஆந்திர மாணவர்களைப் பொருத்தவரை மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில் கேரளாவை மிஞ்ச கூடியவர்கள். அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து எல்லா மாநிலங்களிலிருந்தும் கல்விக்காக மாணவர்கள் செல்கிறார்கள் இருந்தும் பாதிக்கப்படுபவர்கள் அனேகமாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர் எனவே அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து மனதளவில் அடுத்தவர்களை காயப்படுத்தாத வண்ணம் செயல்பட அரசு பயிற்சி அளிக்க வேண்டும்.


Ramesh Sargam
ஜன 16, 2024 06:09

அமெரிக்காவில் வேலையின்மை இருக்கிறது. இதுபோன்று வெளிநாட்டவர்கள் அங்கு மேற்படிப்புக்கு செல்வதும், அங்கு பணியில் அமர்வதும் அங்குள்ள சோம்பேறிகளுக்கு பிடிப்பதில்லை. ஆகையால் அவர்களில் யாராவது ஒருவர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும். விசாரிக்கவும். கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன்.


Ramesh Sargam
ஜன 16, 2024 06:05

அநேகமாக இனவெறி தாக்குதலாகத்தான் இருக்கும்.


Senthoora
ஜன 16, 2024 20:18

நீ பார்த்தியா, நாங்களும்30 வருடங்களாக இருக்கிறோம், பிள்ளைகளும் இன்று வயதுக்கு வந்து திருமணமும் முடித்து பிரச்சனை இல்லாமல் இருக்கிறாங்க, இங்குவரும் மாணவர்களும் சட்டங்களுக்கு காட்டப்படுவதில்லை, எதோ இந்தியாவில் பிரபுக்கள் குடும்பம் நாங்க, இப்படித்தான் வாழ்வோம் என்று இருந்தால் முடிவு நல்லாக இருக்காது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பெண்களை சீண்டுவது, இப்படி பல முகம் சுளிக்கும் செயல்களை செய்கிறார்கள். அதுக்காக இனவெறி சொல்லக்கூடாது, போலீசார் சீக்கிரம் யாருடைய அழுத்தமும் இல்லாமல் உண்மையை வெளிகொணர்வார்கள். தண்டனையும் பலமாக இருக்கும். அவசரப்பட்டு இப்படி இனவெறி என்று சொன்னால் எல்லோருக்கும் வெறுப்புதான் இந்தியர்கள் மீது வரும்.


vaiko
ஜன 16, 2024 21:03

இன வெறி இல்லை. இங்கே உள்ள சாதி வெறி அங்கெ சென்றுவிட்டது. கேன புத்தி.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ