உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: மத்திய அரசு உதவியை நாடும் பெற்றோர்!

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: மத்திய அரசு உதவியை நாடும் பெற்றோர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தெலுங்கானாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரின் உடலை கொண்டு வர மத்திய அரசின் உதவியை குடும்பத்தினர் நாடியுள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில், தனது அறைத் தோழனுடன் ஏற்பட்ட சண்டையில் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 வயதான முகமது நிஜாமுதீன் என்ற இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் 2016ம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=965oujkn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0படிப்பினை முடித்த பிறகு, அவர் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் நிபுணராக சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்ற பிறகு கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். முகமது நிஜாமுதீனின் தந்தை, தனது மகனுக்கும் அறை தோழனுக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட கைகலப்பை அடுத்து போலீசார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.தனது மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று ஹஸ்னுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், எனது மகன் நிஜாமுதீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஏதோ ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும் அறிந்தேன். போலீசார் அவரை சுட்டுக் கொன்றதற்கான உண்மையான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தையும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தையும் தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sesh
செப் 20, 2025 15:00

உண்மை.


jkrish
செப் 19, 2025 19:58

அமெரிக்கா காவல் துறை மிகவும் கெடுபிடி.அதுவும் அவர்கள் சொன்னவை நடக்க வேண்டும், இல்லை தண்டனை தான். மிகவும் வருத்தம் அளிக்கும் விடயம்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 19, 2025 18:35

விடியல் சார் ராவுல் சார் நீங்கள் நினைத்தால் நடக்கும்


Rathna
செப் 19, 2025 18:08

என்ன படித்தாலும் என்ன நடந்தாலும், உடன் தங்கி இருந்தவரை கத்தியால் குத்திவிட்டு - போலீஸின் முன்னால் ரத்தம் வழியும் கத்தியுடன் நின்றால் போலீஸ் தகுந்த டிக்கெட் வாங்கி அங்கே வழி அனுப்புவார்கள். இது தெரியாமல் நடந்தால் அங்கே என்ன இந்தியாவா, சிறுபான்மை கோட்டாவில் தப்பிக்க அல்லது போலீஸ் பயப்பட??


Rajasekar Jayaraman
செப் 19, 2025 18:01

சிறிய சண்டைக்காக போலீசார் சுட்டு கொன்று இருப்பார்களா இதில் ஏதோ மர்மம் இருக்கிறது இந்திய அரசு விசாரிக்க வேண்டும் யார் மீது தவறு என்று.


V.Mohan
செப் 19, 2025 14:11

கருத்து எழுதறேன் பேர்வழி என்று தங்களுக்கு சரி என தோன்றியதை எழுதும் நண்பர்களே சாதாரண சண்டைக்கு ஏன் போலீஸ் வருகிறது? அந்த சண்டை பெரிதாகி வன்முறை நடந்ததால் போலீஸ் வந்தது. அங்குள்ள போலீஸ் வந்தவுடனே சண்டை இடத்தில் உள்ள எலலோரையும் உடனே கீழ்படிதலுடன் தலைமேல் கைகோத்து தரையில் படுத்துவிட எச்சரிப்பார்கள். அடுத்த நொடி கீழ்படிந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலில் சுட்டுவிட்டு பிறகு தான் மற்ற எல்லாம். இறந்த நபர் தப்பு செய்யலை என்றாலும் போலீஸ் உத்தரவுக்கு கீழ்படியவில்லை என்றால் சுட்டுபிடிப்பது மட்டுமே அவர்களது வேலையாகிவிட்டது. இவ்வளவு வருடம் அமெரிக்காவில் இருந்தும் அந்த நபருக்கு போலீஸ் செயல்பாடு தெரியவில்லை என்பது நம்பும் படியாக இல்லை. வேறு ஏதோ முக்கிய காரணம் இருக்கும்


MUTHU
செப் 19, 2025 16:45

மோகன் தாங்கள் கூறியது உண்மையே. மேலை நாடுகளில் சட்ட அதிகாரி அதான் போலீஸ் சொன்னவுடன் உடனே படிந்து விடவேண்டும். அவர்கள் எப்பொழுதும் சுடும் ஆர்டர் வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு எந்த அதிகாரியிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு விளக்கம் கொடுத்தல் போதுமானது.


Balaa
செப் 19, 2025 18:43

கருத்து சரி. அதென்ன " தங்களுக்கு தோன்றியதை எழுதும்" என்று அனாவசிய உமது கருத்தை ஏன் இங்கு கூறவேண்டும். நீங்க என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா. அடக்கி வாசி ஆப்ரகாம் லிங்கன் பரம்பரையாளரே.


&2992&3006&2972&3006 &2986&3018&2985&3021&2985&3015&2992&3007
செப் 19, 2025 13:49

நீங்கள் குறிப்பிடும் மகபுப் நகர் மாவட்டம் திராவிட மாடல் அரசில் வராது.


Ramesh Sargam
செப் 19, 2025 12:42

இறப்பு வருத்தம்தான். இருந்தாலும் அறைத்தோழனுடன் பிரச்சினை என்றால், விலகிவிடவேண்டும், வேறு இடத்திற்கு குடிபோயிருக்கவேண்டும். அதைவிட்டு, சண்டை போட்டுகொண்டு, அதுவும் வேறு ஒரு நாட்டில்….


sankaran
செப் 19, 2025 12:42

ஆஸ்திரேலியாவிலும் இப்படித்தான் போலீசார் மனைவி முன்னாடியே கணவனை சுட்டு கொன்றார்கள்...


naranam
செப் 19, 2025 12:24

தன்னுடன் ஒரே அறையில் இருப்பவர் மீதே கத்தி வீச்சு என்றால் அப்புறம் எப்படி சுடாமல் விடுவார்கள்? பெயரும் கத்தியும்! அமெரிக்கப் போலிஸார் முழு விவரமும் தெரிவிப்பார்.. அப்போது உண்மை விளங்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை