வாசகர்கள் கருத்துகள் ( 1 )
"சர்வதேச நிதியத்திடமிருந்து [டோப்பப்பாஸ்தான் போல] தொடர்ச்சியாக கடன் வாங்குகிறது" - அந்த ஒரு வார்த்தையும் சேர்த்து இருக்கலாம்.
நியூயார்க்: 'மதவெறியிலும் பயங்கரவாதத்திலும் ஊறிப்போன நாடாக பாகிஸ்தான் உள்ளது' என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் கூறினார். சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்காக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. தற்போது சுழற்சி முறையில் பாகிஸ்தான் இதன் தற்காலிக உறுப்பினராக இந்தாண்டு ஜனவரியில் சேர்க்கப்பட்டது. அதன் தலைமையில் நேற்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 'அமைதியான தீர்வு முறையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் பேசியதாவது: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து நாம் விவாதிக்கிறோம். இதற்கு சில அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதில் ஒன்று தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை. இந்தியத் துணைக் கண்டத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மாடல்களில் முற்றிலும் முரண்பாடு உள்ளது. இதில், இந்தியா முதிர்ச்சியடைந்த ஜனநாயகம், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் மதவெறி மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது. சர்வதேச நிதியத்திடமிருந்து தொடர்ச்சியாக கடன் வாங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
"சர்வதேச நிதியத்திடமிருந்து [டோப்பப்பாஸ்தான் போல] தொடர்ச்சியாக கடன் வாங்குகிறது" - அந்த ஒரு வார்த்தையும் சேர்த்து இருக்கலாம்.