உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது கவலை அளிக்கிறது; சொல்கிறார் அமெரிக்க தூதர்

சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது கவலை அளிக்கிறது; சொல்கிறார் அமெரிக்க தூதர்

வாஷிங்டன்: இந்தியாவை ஒரு அமெரிக்க நட்பு நாடாக வலுப்படுத்துவதும், சீனாவிடம் இருந்து விலக்கி அழைத்துவரவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்கள் வாங்குவதால் இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு அமெரிக்கா விதித்தது. இதனால், இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி தன்னுடைய நண்பர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இந்த நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா, அமெரிக்கா இடையே வரி விதிப்புகளில் பெரிய இடைவெளி இல்லை என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது; வரி விதிப்பில் இந்தியாவும், அமெரிக்காவும் வெகு தொலைவில் இல்லை. வரும் வாரங்களில் வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படக்கூடும். அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் நீண்டகால மூலோபாய இலக்குகள் உள்ளன. இந்தியா இன்று அமெரிக்காவிற்கு உள்ள முதன்மையான நட்பு நாடுகளில் ஒன்று. சீனாவுடன் இருப்பதை விட, அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நெருக்கமான உறவு உள்ளது. இந்தியாவுக்கு சீனாவை விட அமெரிக்காவுடன் அதிக பொதுவான விஷயங்கள் உள்ளன. நீண்டகாலமாக, இந்த உறவில் அந்த தனிப்பட்ட தொடர்பு இல்லை. அதை மீண்டும் கொண்டு வருவேன். இந்த விஷயத்தில் அதிபர் டிரம்ப்பே தீவிரம் காட்டி வருகிறார். இந்தியா, சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது. சீன விரிவாக்கவாதம் இந்தியாவின் எல்லையில் மட்டுமல்ல, இந்த பகுதி முழுவதும் உள்ளது. இந்தியாவை ஒரு அமெரிக்க நட்பு நாடாக வலுப்படுத்துவதும், சீனாவிடம் இருந்து விலக்கி அழைத்துவர முன்னுரிமை கொடுப்போம், என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Gokul Krishnan
செப் 13, 2025 08:46

என்றைக்கும் அமெரிக்கா நம்ப தகுந்த நாடு கிடையாது தனது சந்தை பொருட்களை விற்பதற்கு மட்டும் இந்தியா தேவை அதுவும் நடுத்தர வர்க்க மக்கள் ஆனால் இந்தியா வளர்ந்து விடாமல் இருக்க பாகிஸ்தான் தேவை முடிந்து வரை அமெரிக்க பொருட்கள் வாங்குவதை தவிருங்கள்


RAJ
செப் 12, 2025 16:16

அமெரிக்கா , பக்கிவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது


Barakat Ali
செப் 12, 2025 13:02

சீனா, ரஷ்யா & இந்தியா இடையே ராணுவ ரீதியிலும் ஒருங்கிணைப்பு ஏற்பட்டால் அமெரிக்காவின் நிலை? ஆகவே அஞ்சுகிறார்கள் ....


கண்ணன்
செப் 12, 2025 12:35

ஐயா, வெண்ணெய் திரண்டு்வரும்போது தாழியை உடைத்தது யார்?


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 12, 2025 12:30

அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவது இந்தியாவிற்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது


Subburamu K
செப் 12, 2025 11:54

By supporting the terroristan USA administration, is directly supporting terrorism. USA cannot be a friend to India. All their activities are antihindus anti Indian in nature. Highly inconsistent decisions against our country. USA lost it's credibility in the world order


R. SUKUMAR CHEZHIAN
செப் 12, 2025 11:53

புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் அவர்களின் முதல் பணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கூடிய விரைவில் பாரதத்துடன் இணைக்க உறுதுணையாக இருக்க வேண்டும், ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆக 2026 குள் உதவவேண்டும் இதன் மூலம் சீனாவுக்கு செக் வைக்கலாம், நேபாளம், பூட்டான், மியான்மர் பாரதத்துடன் இணைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் வங்கதேசதில் சிறுபான்மை இந்துக்களுக்கு சிறு பிரச்சனை என்றாலும் அந்த நாட்டிற்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும், குறைந்த பட்சம் இதற்கு உதவினால் மட்டுமே நீங்கள் எங்களின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருக்க முடியும். இனி அமெரிக்காவை நம்ப நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.


cpv s
செப் 12, 2025 11:40

never and ever belive america


duruvasar
செப் 12, 2025 11:38

சென்ற வருடமே ஐயா மன்மோகன் சிங் இறந்துவிட்டார்கள். தாங்கள் ஊருக்கு புதுசு என தெரிகிறது. நேரு குடும்பத்திலும் யாரும் தாங்கள் நேரு வகையறாக்கள் என சொல்லிக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள். சீனாவிடம் நட்ப்புக்கு பேசியதால் கான் குடும்பமும் ஆப் ஆகி விட்டது .


V RAMASWAMY
செப் 12, 2025 11:01

பாரத புண்ய பூமி மீது வெறுப்பையும் வேற்றுமையையும் காட்டுவதால் நமக்கு நஷ்டமில்லை, அவர்களுக்குத்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை