உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்தது

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்தது

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, ஜெர்மனியுடன் போராடி தோற்றது. இதையடுத்து பைனல் கனவு தகர்ந்தது.ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் போட்டிகள் லீக் முறையில் நடந்தன.உலகத்தரவரிசையில் 'நம்பர்-7' இடத்திலுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 'பி' பிரிவில் இடம் பெற்றது. 3 வெற்றி, 1 'டிரா', 1 தோல்வியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் உலகின் 'நம்பர்-2' அணியான இங்கிலாந்தை 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் இந்திய அணி, 'நம்பர்-5' இடத்திலுள்ள ஜெர்மனியை எதிர்கொண்டது.இதில் 2-3 கோல் கணக்கில் ஜெர்மனியுடன் போராடி தோற்றது. இதன் மூலம் இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்தது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், இந்திய அணி ஸ்பெயின் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 07, 2024 05:36

ஒரு காலத்தில் தலை சிறந்த அணியாக இருந்தது - இன்று வெங்கலத்துக்கே போட்டி போடும் நிலை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை