உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!

அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியதாக பலமுறை இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அசைவ பால் விஷயத்தில் பேச்சில் முட்டுக்கட்டை நிலவுவதாக தெரிகிறது.இந்தியாவுக்குப் பிறகு பேச்சைத் தொடங்கிய பல நாடுகளுடன், அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டது. ஆனால், பால் பண்ணைத் துறைதான் இந்தியாவுடனான பேச்சில் இழுபறியாக இருக்கிறது.வேளாண்மை, கால்நடைத் துறைகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதில் இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.அமெரிக்க பால் பொருட்களை அனுமதிப்பதில், இந்திய கலாசார தொடர்பு குறித்த கவலையால் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

அசைவ பால்?

அமெரிக்காவில் பசுக்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. பன்றி, மீன், நாய், குதிரை ஆகியவற்றின் கொழுப்பு மற்றும் பாகங்கள் கலந்த உணவுகள் வழங்கப்படுவதால் அவற்றின் பால் அசைவமாக கருதப்படுகிறது.இந்தியாவில், பசுக்கள் கலாசார முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுக்கு சுத்த சைவ உணவு முறையே பின்பற்றப்படுகிறது. மேலும், மதரீதியான சடங்குகள், கோவில்களில் பால், நெய் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அமெரிக்க பால், பால் பொருட்களை அனுமதிக்க இந்தியா மறுக்கிறது.எனவே, அசைவம் சார்ந்த உணவுகள் வழங்கப்படாத பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பால், பால் பொருட்கள் என்பதற்கான சான்றிதழை கட்டாயமாக்கினால், இறக்குமதியை அனுமதிக்க பரிசீலிப்பதாக இந்தியா கூறுகிறது.அமெரிக்க பால் பண்ணை பொருட்கள் இறக்குமதியை அனுமதித்தால், உள்நாட்டில் பால், பால் பொருட்கள் விலை குறைய நேரிடும் என்பதாலும், சிறிய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும் இந்தியா தயங்குகிறது. இது பேச்சு நடத்தக்கூட வாய்ப்பற்ற சிவப்புக் கோடு என்று இந்தியா கூறி வருகிறது.மற்றொரு விலங்கின் இறைச்சி, ரத்தத்தை உணவாகக் கொண்ட பசுவிடம் இருந்து பெறப்படும் வெண்ணெய்யை சாப்பிடுவது குறித்து கற்பனை செய்து பாருங்கள். இந்தியா அதை ஒருபோதும் அனுமதிக்காது.அஜய் ஸ்ரீவத்சவா,உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (ஜி.டி.ஆர்.ஐ.,)அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதி அனுமதிக்கப்பட்டால், இந்திய பால், பால் பொருட்கள் உற்பத்தி குறைந்தபட்சம் 15 சதவீதம் சரிவடையும். பால் சந்தையில் ஆண்டுக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.-பாரத ஸ்டேட் வங்கி ஆய்வு2023 உலக அட்லாஸ் அறிக்கையின்படி, இந்திய மக்களில் 38 சதவீதம் பேர் சைவ உணவு மட்டுமே உண்பவர்கள்.பசுக்கள் இறைச்சி, எலும்பு துாள், ரத்தம், திசுக்கள் நேரடியாகவோ, பவுடராகவோ, மாற்று உணவில் கலந்தோ வழங்கப்படவில்லை என்ற சான்றிதழ் பெறுவது, கால்நடை பராமரிப்பு, பண்ணை துறை விதிகளில் கட்டாயம். 2023-24 - இந்திய பால் உற்பத்தி 23.93 கோடி டன். -கால்நடை பராமரிப்பு துறை புள்ளிவிபரம். கலாசார அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பான பால் பண்ணைத் துறையில் இறக்குமதியை அனுமதிப்பதில்லை என்பதில், அமெரிக்காவிடம் இந்தியா உறுதி காட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Rajpal
ஜூலை 19, 2025 08:17

இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும் போது அமெரிக்காவிடம் பால் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை என்ன? நம் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கவா? இந்திய அரசும் தனி மனிதர்களாகிய நாமும் அமெரிக்க பால் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்.


சண்முகம்
ஜூலை 18, 2025 19:37

அமெரிக்காவில் பால் மற்றும் பிற பால் உணவை உண்பதால், சிறுமிகள் சீக்கிரம் பூப்படைகின்றனர். அமெரிக்காவில் 60, 70 களில் எடுக்கப்பட்ட பெண்களையும் இப்பொழுதுள்ள பெண்களின் படத்தையும் பார்த்தால் விளங்கும்


venugopal s
ஜூலை 18, 2025 19:15

இந்தியாவைத் தவிர மற்ற பெரும்பாலான நாடுகளில் மக்கள் புரோட்டீன் சத்து மிகுந்த மாட்டுக்கறியையும் பன்றிக்கறியையும் சாப்பிடுபவர்கள் தான். இங்கு மட்டுமே இது அரசியலாக்கப் படுகிறது!


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2025 20:57

Professional Jihadi spotted.


Rajalakshmi
ஜூலை 18, 2025 14:20

ஒருக்காலும் நமது பாரத தேசம் இதற்கு ஒப்புக்கொள்ளவே கூடாது. சென்ற முறை Trump பதவிக்கு வந்தவுடன் Canada -வை பயங்கரமாக arm twisting செய்து தங்கள் அமெரிக்க milk அண்ட் milk products இறக்குமதி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார் . Despite Canada being self sufficient . Modi should not cave in. சில வருடங்கள் முன்பு மனித மூளையை தாக்கும் fatal disease mischievously labelled mad  cows  disease வந்து பலர் மடிந்தது மறக்கலாகாது . அசைவ உணவை வலுக்கட்டாயமாக பசுக்களுக்கு வழங்கியதன் விளைவாகும். போலி சான்றிதழ் அமெரிக்காவால் தயாரிக்க முடியாத என்ன ? WMD என அமெரிக்காவும் பிரிட்டனும் நொடிக்கொருமுறை கூறியது அண்டப்புளுகு என அவர்களே ஈராக் நாட்டை நாசம் செய்தபின் படு சாவகாசமாக ஒப்புக்கொண்டார்கள். 


Rajalakshmi
ஜூலை 18, 2025 14:15

ஒருக்காலும் நமது பாரத தேசம் இதற்கு ஒப்புக்கொள்ளவே கூடாது. சென்ற முறை Trump பதவிக்கு வந்தவுடன் Canada -வை பயங்கரமாக arm twisting செய்து தங்கள் அமெரிக்க milk அண்ட் milk products இறக்குமதி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார் . Despite Canada being self sufficient . Modi should not cave in. சில வருடங்கள் முன்பு மனித மூளையை தாக்கும் fatal disease mischievously labelled mad cows disease வந்து பலர் மடிந்தது மறக்கலாகாது . அசைவ உணவை வலுக்கட்டாயமாக பசுக்களுக்கு வழங்கியதன் விளைவாகும். போலி சான்றிதழ் அமெரிக்காவால் தயாரிக்க முடியாத என்ன ? WMD என அமெரிக்காவும் பிரிட்டனும் நொடிக்கொருமுறை கூறியது அண்டப்புளுகு என அவர்களே ஈராக் நாட்டை நாசம் செய்தபின் படு சாவகாசமாக ஒப்புக்கொண்டார்கள்.


Rajalakshmi
ஜூலை 18, 2025 14:01

ஒருக்காலும் நமது பாரத தேசம் இதற்கு ஒப்புக்கொள்ளவே கூடாது. சென்ற முறை Trump பதவிக்கு வந்தவுடன் Canada -வை பயங்கரமாக arm twisting செய்து தங்கள் அமெரிக்க milk அண்ட் milk products இறக்குமதி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தினார் . Despite Canada being self sufficient . Modi should not cave in. சில வருடங்கள் முன்பு மனித மூளையை தாக்கும் fatal disease mischievously labelled mad cows disease வந்து பலர் மடிந்தது மறக்கலாகாது . அசைவ உணவை வலுக்கட்டாயமாக பசுக்களுக்கு வழங்கியதன் விளைவாகும். போலி சான்றிதழ் அமெரிக்காவால் தயாரிக்க முடியாதா என்ன ? WMD என அமெரிக்காவும் பிரிட்டனும் நொடிக்கொருமுறை கூறியது அண்டப்புளுகு என அவர்களே ஈராக் நாட்டை நாசம் செய்தபின் படு சாவகாசமாக ஒப்புக்கொண்டார்கள்.


Ganapathy
ஜூலை 18, 2025 13:56

பன்றி கொழும்பு கலந்த பாலுக்கு ஹலால் சர்டிபிகேட் கிடைக்குமா?


Anand
ஜூலை 18, 2025 13:35

இந்தியாவின் நிலைப்பாடு சரியானதே, சைவ அசைவ என எந்த ஒரு பால் பொருளும் இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது.


Ganapathy
ஜூலை 18, 2025 13:01

மொதல்ல பன்றி கொழும்பு கலந்த அமெரிக்க பால் பொருட்களை முஸ்லிம்கள் உண்பார்களா? சைவ உணவாளர்கள்தான் குறைந்துவிட்டனரே என எழுதுபவர்கள் இதை முஸ்லீம்களிடம் கேட்டு எழுதவும்.


Ganapathy
ஜூலை 18, 2025 12:58

டெமோகிராபிக் சேஞ்சு என்பதில் ஒருவரின் உணவுப்பழக்கத்தை மற்றவரின் மீது திணிப்பது அடங்கும்.சுவர்கள் ஏன் அசைவ உணவை புடிக்க வேண்டும்? சிறிது மாதங்களுக்கு முன் இதுதானே பசு மாமிசத்தை உண்பது தொடர்பாக மோதிக்கு எதிரா கிளிப்பி விட்டப்பட்டது? உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விஷயத்தில் உணவு பழக்கம் அவரவர் சுதந்திரம்என தீர்ப்பும் வந்தது. இந்த அசைவப் பால்பொருட்களை சைவ உணர்வாளர்கள் மீது திணிப்பது அந்த உத்தரவிற்கு மாறானது. சட்டவிரோதமானது. இதை எதிர்த்து எந்த சைவ உணவாளர்களும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.


முக்கிய வீடியோ