உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வலிமை பெறுகிறது இந்திய கடற்படை: ஐ.என்.எஸ்., துஷில் டிச.,9ல் இணைப்பு

வலிமை பெறுகிறது இந்திய கடற்படை: ஐ.என்.எஸ்., துஷில் டிச.,9ல் இணைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ்., துஷில் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.இந்த போர்க்கப்பல்களை கட்டுவதற்கு 2016ல் ஒப்பந்தம் போடப்பட்டது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாவலன் என்று அர்த்தம் ஆகும். வரும் 9ம் தேதி முதல் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ள நிலையில், இரண்டாவது போர்க்கப்பல், அடுத்தாண்டு துவக்கத்தில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. ரஷ்யாவின் கலினின்கிராட் நகரில் 9ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gm21eo6q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஐஎன்எஸ் துஷில் என்பது கிர்விக் போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டவை ஆகும். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட தல்வார் மற்றும் தேக் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் பயன்பாட்டில் உள்ளன.125 மீட்டர் நீளம் கொண்ட துஷில் போர்க்கப்பல் 3900 டன் எடையை தாங்கும். எதிரிகளின் ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. கடலில் நிலவும் எந்த சூழ்நிலையையும் இக்கப்பல் சமாளிக்கும். இக்கப்பலில் 26 சதவீதம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திலும், 33 சதவீத அமைப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பெல் நிறுவனம், கெல்ட்ரான் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பங்களிப்புகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சாண்டில்யன்
டிச 06, 2024 19:35

தரைப்படைMILITARY, பார்டர் செக்யூரிட்டி ரிசர்வ் போர்ஸ் BSRF, எல்லாவற்றிலும் தமிழர்களை சேர்ப்பார்கள். சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸில் CSIF சேர்ப்பார்களா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்


murugan P
டிச 06, 2024 19:21

Super


சாண்டில்யன்
டிச 06, 2024 19:12

இந்த போர்க்கப்பல் தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டாமல் எச்சரித்து இலங்கை கடற்படை அட்டூழியங்களிலிருந்து பாதுகாக்குமா?


Yes your honor
டிச 06, 2024 20:28

இதைத்தான் உங்கள் தலைவரே சொல்லிவிட்டார், தமிழக மீனவர்களுக்கு பேராசை அதிகம், இவர்கள் ஏன் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள் என்று. கச்சத்தீவை பறிகொடுத்துவிட்டு வெட்டி விதண்டாவாதம் செய்வதால் என்ன பயன். இது திறனற்றவர்களின், திறனற்ற தன்மையின் வெளிப்பாடே.


சாண்டில்யன்
டிச 06, 2024 21:18

இந்த கச்சத்தீவு இந்தியாவசம் இருந்தால் வங்க கடலில் இந்திய எல்லைக்கோடு தெளிவாகத் தெரியுமோ? தாரை வார்த்ததாக சொல்வார்கள் இவர் பெரிய மாறுதலாக பறி கொடுத்து விட்டதாக சொல்கிறார் கொள்ளை போனதற்கு பறிகொடுத்தவன் எப்படி பொறுப்பாவான். அடுத்து இலங்கை கப்பற்படை இரவும் பகலும் தங்கள் கடல் எல்லையில் ரோந்து வந்து எல்லை தாண்டுவோர் மீது நாடவடிக்கை எடுத்து கடமையை சரிவர செய்கிறது போல அண்டை நாட்டு ராணுவத்திடமிருந்து இந்திய பிரஜைகளை காக்கவேண்டிய பொறுப்பு இந்திய ராணுவத்துக்கு உண்டா இல்லையா? எத்தனை எல்லை மீறல்களை பிடித்துள்ளார்கள் கள்ளக்கடத்தல்களை பிடித்துள்ளார்கள்? அவர்களது ஊதுகுழலாக பதில் சொல்வீரா? இந்த கேள்வியை தினமலர் பதிவிடுமா?


Amruta Putran
டிச 06, 2024 17:31

Best Wishes


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை