உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது இன்டெல்

18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது இன்டெல்

வாஷிங்டன் : கூடுதல் செலவினங்களை தவிர்ப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக இன்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது.சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் நிறுவனம். ஜூன் மாத காலாண்டில், அந்த நிறுவனம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது. இதனையடுத்து நடப்பாண்டு 10 பில்லியன் டாலர்( 83 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பு செலவை குறைக்கும் திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. தனது செயல்பாட்டை நெறிபடுத்தும் வகையில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. கடந்தாண்டு இறுதியில் 1,24,800 பேர் தங்களது நிறுவனத்தில் பணியாற்றுவதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்போது இன்டெல் எடுத்த முடிவால் 18 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 02, 2024 18:25

இன்டெல் கதை இப்புடி. வயதான கழுதைபோல மாறிவிட்டது. ஆனால் என்விடியா கதை வேறு மாதிரி. புதன்கிழமை அன்று ஒரேநாளில் 330 பில்லியன் டாலர் என்விடியா நிறுவனத்தின் சொத்து மதிப்பு உயர்வு. கடந்த பிப்ரவரி மாதமும் ஏற்கெனவே ஒருமுறை ஒரேநாளில் 277 பில்லியன் டாலர் உயர்ந்தது. இப்போது மீண்டும் உயர்வு. மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அடுத்து உலகின் 3 வது மதிப்பு மிக்க நிறுவனமாக உயர்ந்துள்ளது.


Rajarajan
ஆக 02, 2024 17:42

வருத்தம் தான். ஆனாலும், என்ன நடந்தாலும், அமெரிக்க மாப்பிள்ளை தான் வேண்டும் என திருமணத்திற்கு அடம்பிடிக்கும், இக்கால பெண்களை என்ன சொல்ல


J.V. Iyer
ஆக 02, 2024 17:13

இவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்தாலே பொருள்லாதரம் வளரும்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி