உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணல் அள்ளுவதை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்: அஜித் பவார் விளக்கம்

மணல் அள்ளுவதை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்: அஜித் பவார் விளக்கம்

மும்பை: சட்ட அமலாக்கத்துறையின் பணிகளில் தலையிடும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை. அங்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகவே பெண் போலீஸ் அதிகாரியிடம் மொபைல் போனில் பேசியதாக மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.கேரளாவை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணா. ஐபிஎஸ் அதிகாரியான இவர், சமீபத்தில் மஹாராஷ்டிராவில் பணியில் அமர்த்தப்பட்டார். அவர், சோலாப்பூர் மாவட்டத்தின் கர்மலா என்ற பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுத்தார்.அப்போது, அங்கிருந்த துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் போலீசாரை தடுத்தார். அப்போது, அஜித்பவாருக்கு மொபைல் போனில் அழைத்து அதனை அஞ்சனா கிருஷ்ணாவிடம் கொடுத்தார்.அப்போது போலீஸ் அதிகாரி, அஜித் பவாரின் குரலை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால், தனது மொபல்போனில் அழைக்கும்படி தெரிவித்துள்ளார்.இதனால் கோபமடைந்த அஜித் பவார், ' உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா. உங்களது வாட்ஸ்அப் எண்ணை கொடுங்கள். எனது முகத்தை நீங்கள் பார்க்க முடியும். உங்களுக்கு என்ன தைரியம். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றார்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாக துவங்கியது. மீடியாக்களிலும் செய்தி வெளியாக அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் அஜித்பவாரை கடுமையாக விமர்சிக்க துவங்கினர். திருடர்களை பாதுகாத்து கொண்டு போலீஸ் அதிகாரியை மிரட்டுவதாக கொந்தளித்தனர். சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவிக்க துவங்கினர்.பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து அஜித் பவார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போலீஸ் அதிகாரியுடன் நான் நடத்திய கலந்துரையாடலை வைத்து எனது நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். சட்ட அமலாக்கத்துறையினர் பணிகளில் தலையிடுவது எனது நோக்கம் அல்ல என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன். அந்த இடத்தில் பிரச்னை மேலும் பெரிதாகாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தலையிட்டேன். நமது போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது உயர்ந்த மதிப்பை வைத்துள்ளேன். தைரியத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மீது நல்ல மதிப்பு கொண்டுள்ளேன். அனைத்துக்கும் மேலாக சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறேன். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதிலும், சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pakalavan
செப் 05, 2025 22:16

எல்லாரும் ரௌடிகள்தான்


N Sasikumar Yadhav
செப் 05, 2025 18:33

அந்த கர்மலாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ரவுடிகள் திருடன்கள் தொல்லை மிகமிக அதிகமாக இருக்கிறது.இந்த காவல்துறை அதிகாரியாவது இந்த தொல்லையை குறைப்பாரா?தமிழக லாரிகளுக்கு மிகமிக தொல்லைகள் அதிகமாக இருக்கிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை