வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இத்தனை நாடுகள் சங்கி நாடுகளாக ஆயிடுவாங்க போல ..... துக்ளக்கார் போராடணும் ..........
இந்தியாவிற்கு உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம். ஜெய் ஹிந்த்.
நியூயார்க்: சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, வரும், 21ம் தேதி, 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நம் நாட்டின் கோரிக்கையை ஏற்று, 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, டிச., 21ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐ.நா., பொது சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதை ஏகமனதாக ஏற்ற ஐ.நா., சபை டிசம்பர் 21 ஆண்டுதோறும் உலக தியான நாளாக அனுசரிக்கப்படும் என்று, கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, வரும் 21ம் தேதி இரண்டாவது முறையாக உலகம் முழுதும் தியான தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, 100 நாடுகளில் மொத்தம் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதாவது, உலகின் வெவ்வேறு நேரங்களின்படி, இந்த நிகழ்ச்சி, 33 மணி நேரமாக நடைபெறும். நியூசிலாந்து நேரப்படி காலை 8:00 மணிக்கு துவங்கி, அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு நாட்டிலும், தலா, 20 நிமிடங்களுக்கு தியான நிகழ்ச்சி நடக்கும். சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிப்பதை தட்சிணாயனம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஜூன் 21ல் உத்தராயனம் மற்றும் டிச., 21ல் தட்சிணாயனத்தின் நடுப்பகுதியாகும். இதையடுத்தே, ஜூன் 21ம் தேதி யோகா தினத்துக்கும், டிச., 21ம் தேதி தியான தினத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாடுகள் சங்கி நாடுகளாக ஆயிடுவாங்க போல ..... துக்ளக்கார் போராடணும் ..........
இந்தியாவிற்கு உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம். ஜெய் ஹிந்த்.