உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடித்து விரட்டியது பிரேசில்; அலறுகிறார் எலான் மஸ்க்; பைத்தியம் தான் முதலீடு செய்யும் என புலம்பல்!

அடித்து விரட்டியது பிரேசில்; அலறுகிறார் எலான் மஸ்க்; பைத்தியம் தான் முதலீடு செய்யும் என புலம்பல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'தற்போதைய அரசு நிர்வாகத்தின் கீழ் பிரேசிலில் முதலீடு செய்வது பைத்தியக்காரத்தனமானது' என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.'தணிக்கை உத்தரவை எதிர்ப்போம்' என்று கூறி, பிரேசிலில் செயல்பட்ட எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததால், எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டது.இது தொடர்பாக, பில்லியனர் ஹெட்ஜ் நிதி மேலாளர் பில் அக்மேன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளத்தை மூட உத்தரவிட்டது சட்டவிரோதம். இது பிரேசிலை ஒரு முதலீடு செய்ய முடியாத சந்தையாக மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.சீனாவும் இதேபோன்ற செயல்களைச் செய்தது. இது அவர்களின் மதிப்பீட்டில் சரிவுக்கு வழிவகுத்தது. இந்த சட்டவிரோத செயல்களில் இருந்து விரைவில் பின்வாங்காத வரையில் பிரேசிலுக்கும் இதே நிலைதான் ஏற்படும்'.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோபத்தில் இருக்கிறார் மஸ்க்!

இதற்கு பதில் அளித்து எலான் மஸ்க் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதில், ''தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரேசிலில் முதலீடு செய்வது பைத்தியக்காரத்தனமானது. புதிய தலைமை அமையும் போது அது மாறும் என நம்பலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Easwar Kamal
செப் 04, 2024 18:26

ஏற்கனவே டெஸ்லா பங்குகள் சரிவை நோக்கி போய் கொண்டுஇருக்கிறது. காணாத குறைக்கு இவன் வேற trumpuku தவறான வலியில் அறிவுரை வேற. டிரம்ப் இப்போ நாசம போவதுக்கு இவனும் ஒரு கரணம். கமலா ஹாரிஸ் அட்ச அமைந்தால் டிரம்பு ஜெயிலுக்கு போவது உறுதி. இவன் தன் சொந்த தெற்கு ஆப்பிரிக்கா போக வேண்டியதுதான்.


Ganapathy
செப் 01, 2024 10:40

இவனோட ஆளுதான் ஏக்கர் படேல்.இன்னிக்கு அமெரிக்காவுல ஒளிஞ்சுகிட்டு நக்ஸல் வேலை இங்க செய்யுறான்


பேசும் தமிழன்
செப் 01, 2024 10:24

இந்தியாவில் இருந்தும் X தளத்தை அடித்து விரட்ட வேண்டும்... ..தான் ஏதோ சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆள் என்ற நினைப்பில் இருக்க கூடாது ....ஒரு நாட்டில் தொழில் செய்ய வேண்டும் என்றால் .....அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும்.


Dhandapani Munusami
செப் 01, 2024 16:03

வெரி correct


ஆரூர் ரங்
செப் 01, 2024 09:24

இங்கும் நாட்டுக்கெதிரான செயல்களில் ஈடுபடும் நகர நக்சல் ஊடக கும்பலை இது போல பிதுக்கினால்தான் நாடு நிம்மதியாக வளரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை