உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்து வர தடை ; ஈரான் அரசு

நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்து வர தடை ; ஈரான் அரசு

தெஹ்ரான்: ஈரானில் உள்ள 20 நகரங்களில் நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதற்கான தடையை அந்நாட்டு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள தெருக்களில் நாய்களை வாக்கிங் அழைத்து செல்ல முதலில் தடை விதிக்கப்பட்டது. நாய்களை வாக்கிங் அழைத்து செல்வதனால், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு மேலும் 20 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கெர்மன்ஷா, லாம், ஹமதான், கெர்மன், போரோஜெர்டு, ரோபர்ட் கரீம், லாவாசனத், கோல்ஸ்டன் உள்ளிட்ட நகரங்களிலும் நாய்களை வாக்கிங் அழைத்து செல்ல தடை செல்லப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் நாய் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SEVVANNAN
ஜூன் 10, 2025 06:28

நம்ப ஊரில் நாய்கள் நாம் சுதந்திரமாக தெருவில் நடமாட/நடை பயிற்சி போவதற்கு தடை விதித்துள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை