உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆயிரம் பேரை தூக்கில் போட்ட ஈரான்! மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

ஆயிரம் பேரை தூக்கில் போட்ட ஈரான்! மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரான் நாடு, இந்தாண்டு மட்டும் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது.இது தொடர்பாக நார்வேயை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பானது, கடந்த வாரத்தில் மட்டும் 64 பேர் தூக்கில் போடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் பெரியளவில் கொலை இயக்கத்தை ஈரான் நடத்தி வருகிறது. வெளிநாடுகள் கண்டனம் இல்லாத நிலையில், தூக்கு தண்டனைகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு 975 பேர் தூக்கில் போடப்பட்டனர். இந்தாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே ஏராளமானோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.ஈரானில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்ட பிறகு 1980 களிலும் மற்றும் ஈரான் - ஈராக் போர் நடந்த 1990 காலகட்டத்திலும் ஏராளமானோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு தற்போது தான் மீண்டும் தூக்கு தண்டனை அதிகளவில் நிறைவேற்றப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரான் மதத் தலைவர் அயோதுல்லா அலி காமேனிக்கு எதிராக 2022 - 2023 ல் நடந்த போராட்டத்துக்கு பிறகு கடந்த 3 தசாப்தங்களில் தற்போது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஈரான் தீவிரம் காட்டி வருகிறது என மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.ஈரானில் தற்போது தூக்கு மூலமே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. முன்னர் வேறு முறைகள் பின்பற்றப்பட்டாலும் தற்போது அது நடைமுறையில் இல்லை. மேலும் பெரும்பாலான தூக்கு தண்டனைகள், சிறைச்சாலைகளிலேயே நிறைவேற்றப்படுகிறது. அரிதாக சில தூக்கு தண்டனைகள் மட்டும் பொது வெளியில் நிறைவேற்றப்படுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் தான் அதிகளவு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக, ஆம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Iyer
செப் 24, 2025 05:15

மரண தண்டனை - ஈவு இரக்கம் இல்லாத மனித குலத்தின் - கொடூரமான தண்டனை ஆகும். அதிலும் சீன, ஈரான் போன்ற நாடுகளில் - தங்கள் அரசியல் எதிரிகளை - பொய் குற்றம் சாட்டி - மரண தண்டனை கொடுப்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.


Thravisham
செப் 24, 2025 04:24

எங்கே போய்ட்டானுங்க காசுக்கு மாரடிக்கும் திருட்டு திராவிட போராளிங்க ?


Kasimani Baskaran
செப் 24, 2025 04:04

அடிப்படை வாதம் அதிகரித்தால் நாடு அதள பாதாளத்துக்குத்தான் போகவேண்டும்.


தாமரை மலர்கிறது
செப் 24, 2025 01:18

நேற்று ஹமாஸுக்காக கதறிய போராட்டம் நடத்திய நடிகர்கள், இயக்குனர்கள் இந்த செய்திக்கு வாயை திறக்க மாட்டார்கள்.


Modisha
செப் 24, 2025 00:11

ஹமாஸுக்கு ஒப்பாரி வெச்சாங்களே அதுங்க இப்போ எங்கே


Thravisham
செப் 24, 2025 09:00

வால சுருட்டிகினு கமுக்கமா சுருண்டுக்கிச்சுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை