உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது: டிரம்ப் கண்டிப்பு

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது: டிரம்ப் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' ஈரான் அணு ஆயுதம் வைத்து இருக்கக்கூடிய நாடாக இருக்கக்கூடாது,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் அதிபராக பதவியேற்ற டிரம்ப், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். இதனை ஈரான் கண்டுகொள்ளவில்லை. அணு ஆயுதத்தை அடைந்தே தீருவோம் எனக்கூறியுள்ளது.இந்நிலையில், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த மற்றும் வெற்றிகரமான நாடாக ஈரான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அந்நாடு அணு ஆயுதம் வைத்து இருக்க முடியாத நாடாக இருக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானை அடித்து நொறுக்கப்போவதாக வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. அமைதியான முறையில் ஈரான் வளர்ச்சி பெறவும், செழிக்கவும் தேவையான அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இதற்கான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது மத்திய கிழக்கு நாடுகளில் கொண்டாட்டங்கள் நடக்கும். கடவுள் அந்நாட்டை ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

s.sivarajan
பிப் 05, 2025 22:16

ட்ரம்ப் வந்தாச்சில்ல இனி உலக அரசியல் கலகலப்பாதான் இருக்கும்


Gnana Subramani
பிப் 05, 2025 21:49

இஸ்ரேலின் அணு ஆயுதங்களை பற்றி கவலைப் படமாட்டார்


MUTHU
பிப் 05, 2025 21:18

மன்மோகன் சிங் அவரது காலத்து மதிப்பில் சுமார் ஐந்து லட்சம் கோடிக்கு இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்டார். அப்பொழுது தான் ரஷ்ய கூடங்குளம் அணுவுலை செயல்பட விடாமல் அப்பகுதி மக்கள் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதற்கு காரணமே அமெரிக்கா தான். ரஷ்யா ஒரு அணுவுலை மதிப்பு சுமார் இரண்டாயிரம் கோடி மட்டுமே. டெக்னாலஜியும் நம்மிடம் தந்து விடுவர். நாமே நிர்வகித்து கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்கா அணுஉலை அப்படியில்லை. டெக்னாலஜி தர மாட்டார்கள். அவர்களே நிர்வகிப்பார்கள். அதற்கும் அவர்களுக்கும் நாம் கப்பம் கட்ட வேண்டும். அதற்கான எரிபொருட்கள் அமெரிக்கா சொல்படிதான் வாங்க வேண்டும். விலை கம்மியாய் வாங்க முடியாது. அணுஉலைக்குள் என்ன நடந்தாலும் நமக்கு தெரியாது. அவர்களின் தவறுகளால் அணுவுலையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. நஷ்ட ஈடு தரமாட்டார்கள். அவர்களையும் விசாரிக்க இயலாது. இதை போன்ற மட்டமான நிறைய அம்சங்கள் உண்டு. பாராளுமன்றத்தில் நிறைய எதிர்ப்புகளை மீறி ஒப்பந்தம் போட்டார். நாட்டை குலமழித்தவர்கள் இந்த சிங்கும் சோனியாவும். இதனால் தான் மன்மோகன் ஆட்சி என்றாலே கடும் எரிச்சல் ஏற்படுகின்றது. இதற்கு இன்றைய திமுக உடந்தை. உலகளாவிய டெக்னாலஜி உள்ள நாடு ரஷ்யா. ஆனால் சரியான விலைக்கு தருவார்கள். விலை போட்டிக்கு வருவார்கள். மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா என்றாலே இதனால் தான் பிடிக்காது.


Laddoo
பிப் 06, 2025 03:46

உங்களின் கருத்து முற்றிலும் தவறானது. ஆனால் அமெரிக்க பணம் கூடங்குள பாதிரியார்களிடம் வெள்ளமென பாய்ந்தது. உதயகுமார் மற்றும் சைக்கோ போன்ற கீழ்த்தர அரசியல் வாதிகளின் பைகளை அமெரிக்கா நிரப்பியது உண்மை. ஜெயா உண்மையின் பக்கம் நின்று கேடுகெட்ட எதிர்ப்பாளர்களை ஒடுக்கினார்


Ganesh
பிப் 05, 2025 21:02

தீதும் நன்றும் பிறர் தர வாரா....


Bye Pass
பிப் 05, 2025 20:32

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை ..


Oru Indiyan
பிப் 05, 2025 20:25

அமெரிக்க குடியரசு தலைவர் மிகப்பெரிய அளவில் உலகை சிதைக்க போகிறார்


MUTHU
பிப் 05, 2025 21:22

டிரம்ப் ஒரு அரைகுறை. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த டிரம்ப் அரைகுறை ஆட்சியினையே அந்த மக்கள் மறந்து விட்டனர். ஜோ பைடேனின் செயலின்மையால் டிரம்ப்பின் வெற்றி நடந்து விட்டது. டிரம்ப் அமெரிக்காவினை எங்கே போய் கவிழ்ப்பார். தெரியவில்லை.