உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய ஏவுகணை: ஈரான் வெற்றிகரமாக சோதித்தது

புதிய ஏவுகணை: ஈரான் வெற்றிகரமாக சோதித்தது

துபாய்: கடலுக்குள் நீ்ர்முழ்கி கப்பலில் இருந்து கொண்டு ஒரு இலக்கிலிருந்து மற்றொருஇலக்கை தாக்கும் நவீன ஏவுகணையினை ஈரான் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. ஈரான் தனது அணு ஆயத திட்டத்தினை ரகசியமாக செய்துவருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது. மேலும் ஈரான் யுரேனியம் செறிவூட்டும் மையத்தினை மேலும் மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் கூறிவருகிறது. இந்த நிலையில் ஈரான் தனது காதிர் (QADER) எனப்படும் நவீன ஏவுகணையினை ராணுவ அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் பாரசிக வளைகுடா பகுதியில் வைத்து வெற்றிகரமாக சோதனையிட்டது. இதனை அந்நாட்டு அரசு டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பியது. இந்த சோதனையின் போது அதிபர் முகமது அகமது நிஜாத் உடனிருந்தார். கடலிலிருந்து சுமார் 200 கி.மீ.தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக இந்த காதிர் ஏவுகணை இருக்கும் என அந்நாட்டு ஏவுகணையை தயாரித்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி