உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா தாக்கியும் பின்வாங்காத ஈரான்: இஸ்ரேல் மீது சக்திவாய்ந்த ஏவுகணை வீசியது

அமெரிக்கா தாக்கியும் பின்வாங்காத ஈரான்: இஸ்ரேல் மீது சக்திவாய்ந்த ஏவுகணை வீசியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, 'கொரம்ஷார் - 4' ஏவுகணையை ஈரான் வீசியது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை நேற்று எட்டியது. 'ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து இரு வாரங்களில் முடிவு செய்வேன்' என அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரண்டு நாட்களுக்குள்ளேயே தாக்குவது என முடிவு எடுத்துவிட்டார்.ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்காவின் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை நேரடியாக நேற்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் மூன்று அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல், விமான போக்குவரத்துக்கான தன் வான் பரப்பை மூடியது.இந்த தாக்குதலுக்காக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பதிலடி தரப்படும் என ஈரான் கூறியுள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தளங்களும், இஸ்ரேல் நகரங்களையும் தாக்க போவதாக அறிவித்தது.அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களின் மீது 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரண்டு கட்டங்களாக ஈரான் நேற்று காலை வீசியது. ஏவுகணை வருவதை கண்டறிந்து இஸ்ரேல் முழுதும் எச்சரிக்கை சைரன் அலறியது. இதனால் மக்கள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த ஏவுகணைகளில் பல, இஸ்ரேலின் வான் கவசத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.நேற்றைய தாக்குதலில் சக்திவாய்ந்த கொரம்ஷார் - 4 ஏவுகணையை ஈரான் வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. 1980களில் ஈரான் - ஈராக் போரின் போது, கடும் சண்டை நடந்த ஈரானின் கொரம்ஷார் நகரின் நினைவாக இந்த ஏவுகணைக்கு அப்பெயர் வைக்கப்பட்டது. இது 2,000 கி.மீ., துார இலக்குகளையும் தாக்கக் கூடியது. 1,500 கிலோ வெடிபொருளுடன் விழுந்து வெடிக்கக்கூடியது. இதில், கூடுதல் வெடிபொருட்களை சேர்த்து ஈரான் அனுப்பியது. இந்த தாக்குதலால் குடியிருப்புகள், வங்கிகள், பல்வேறு கடைகள் சேதமடைந்தன. சாலைகள் கட்டடக் குவியல்களால் துண்டிக்கப்பட்டன; 83 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடுகளுக்கு

எச்சரிக்கைஅமெரிக்காவின் செயல்கள் மிகவும் கொடூரமானவை. இது நிரந்தரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா.,வின் ஒவ்வொரு உறுப்பு நாடும் மிகவும் ஆபத்தான, சட்டவிரோதமான மற்றும் இந்த குற்ற நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரான் தன் இறையாண்மை, நலன்கள் மற்றும் மக்களைப் பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக உள்ளது. - அப்பாஸ் அராக்சி ஈரான் வெளியுறவு அமைச்சர்

வழிவகுக்கும்

ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்த அமெரிக்காவின் நடவடிக்கையை யாராலும் மிஞ்ச முடியாது. பூமியில் வேறு எந்த நாட்டாலும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது. டிரம்பின் இந்த முடிவு வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும். மேற்கு ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், அமைதியான எதிர்காலத்திற்கும் இது வழிவகுக்கும்.- பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேல் பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சேகர்
ஜூன் 23, 2025 12:50

இஸ்ரேலியர்கள் ஏராளமான பேர் சாகாவரம் பெற்றவர்கள். எத்தனை ஏவுகணைகள் வீசினாலும் இரண்டு மூன்று பேர் தவிர மற்றவர்கள் காயப்படுவார்களே தவிர உயிரிழப்பு என்பதே இருக்காது. இதை நம்ப வேண்டும்.


Mubarak Ali
ஜூன் 23, 2025 09:47

இஸ்ரேல் இப்பொழுது தான் உண்மையான போர் வீரனை சந்தித்து இருக்கின்றது. யா அல்லாஹ் ஈரான் போர் வீரர்களுடைய கரங்களை வலுப்படுத்துவாயாக. பல ஆண்டுகளாக இஸ்லாமிய பாலஸ்தீன மக்களை கொண்டு குவித்து கொண்டு இருக்கக்கூடிய இஸ்ரேலின் போர் வீரர்களை புறமுதுகிட்டு ஓட செய்வாயாக. இஸ்ரேலுக்கு எந்தெந்த நாடுகள் உறுதுணையாக இருக்கின்றதோ அந்த நாட்டு வீரர்களையும் புறமிதுகுட்டு ஓட செய்வாயாக. உண்மையான வீரர்களுக்கு வெற்றியை தருவாயாக.


Ganapathy
ஜூன் 23, 2025 11:09

கோழைக்கு இவ்வளவு மரியாதை தேவையில்லை.


Guru
ஜூன் 23, 2025 11:45

பண்றிஸ்தான் ஏன் பஞ்சத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 12:20

அப்போ ஈரானிய ஷியா மக்களை இஸ்லாமியர் என ஏற்றுக் கொள்கிறீர்களா? இத்தனை நூற்றாண்டுகளாக காபிர்களாக இருந்தவர்கள் திடீரென எப்படி புனிதர்களாக ஆனார்கள்?


பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 13:17

அவர்கள் செய்யும் தீவிரவாத செயலை.... அவர்கள் வழிபடும் இறைவனே ஏற்றுக் கொள்ள மாட்டார்.... கெடுவான் கேடு நினைப்பான்.


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 23, 2025 07:48

அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டியதுதான். இரான் ஏற்கனவே அனுசக்தி முகாம்களை இடம் மாற்றி விட்டதாக தெரிகிறது. அமெரிக்கா வேஸ்ட் தாக்குதல்.


திகழ்ஓவியன்
ஜூன் 23, 2025 07:23

இஸ்ரயேலுக்கு மரண பயம் காட்டிய முதல் நாடு ஈரான் , என்ன தான் ஈரான் முஸ்லீம் நாடு என்று வெறுப்பு இருந்தாலும் இஸ்ரேல் தேவ இல்லாமல் ஈரான் மீது போர்தொடுத்து இன்று பதுங்கி குழியில் பதுங்கும் நிலை . பாலஸ்தீனர்களின் கண்ணீருக்கு கிடைத்த விடை


பேசும் தமிழன்
ஜூன் 23, 2025 08:01

ஈரான் நாட்டின் அழிவு... உலக அமைதியின் ஆரம்பம்... அதற்காக உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


Rani M
ஜூன் 23, 2025 07:14

nethanyaguஎன்ன தனியாக போரில் இறக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 07:13

Khorramshahr வடகொரியாவின் hwason-10 மூலம் உருவாக்கப்பட்டது , hwason வகை மிசைல்கள் ரசியாவின் R-27 வகை மூலம் உருவாக்கப்பட்டது


sasikumaren
ஜூன் 23, 2025 06:46

ஈரான் நாட்டிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல இஸ்ரேல் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் போர் வந்தால் இறக்க போவது இரண்டு நாட்டு மக்கள் மட்டுமே அரசியல் தலைவர்களுக்கு ஒன்றும் நடக்காது


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 03:41

ஈரானுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நேரடியாக போருக்கு வர சீனா மற்றும் ரஷ்யா தயாரில்லை. அதிக பட்சமாக வடகொரியாவை அனுப்பி வைப்பார்கள். பாகிஸ்தான் தனக்கு கிடைத்த உலகவங்கி நிதியை பயன்படுத்தி ஆயுதம் வாங்கி ஈரானுக்கு கொடுக்க முடியும். மூன்றாம் உலகப்போராக வாய்ப்பு குறைவு.


Haja Kuthubdeen
ஜூன் 23, 2025 10:09

பார்க்கலாம் ரஸ்யா சீனா இறங்குமா என்பதை...உலக ரவுடி நாட்டாமை அமெரிக்காவை எதிர்க்க பலமான ரஸ்யா சீனா வடகொரியா கூட்டணி உலகிற்கு தேவை


Ganapathy
ஜூன் 23, 2025 11:13

பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்யும் ஒரு இஸ்லாமிய அயோக்கிய கோழை ஆளும் நாட்டுக்காக எந்த அடிப்படை பொது அறிவுள்ள நாடும் தன்னை அழித்துக் கொள்ளாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை