உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஈரானின் அணுசக்தி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை: சமீபத்திய நாட்களில் எதிரியின் மிருகத்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து, இன்று அதிகாலை நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். சர்வதேச விதிமுறைகளை மீறும் இந்த நடவடிக்கை, துரதிர்ஷ்டவசமானது. சர்வதேச சமூகம் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஆதரவளிக்கும். தியாகிகளின் ரத்தத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த தேசிய தொழில்துறையின் வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பு சட்ட நடவடிக்கைகள் உட்பட ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mohamed Rahmath
ஜூன் 23, 2025 09:58

அமெரிக்காவு இஸ்ரேலுக்கும் எல்லை தகராறா வேறு ஏதாவது பிரச்சனையா தேவையில்லாமல் இஸ்ரேலுக்காக வரிந்து கட்டிக்கொண்டு ஈரானிடம் சண்டையிட்டு உலக அமைதியை கெடுக்க பார்க்கிறது உலக ரவுடி அமெரிக்கா....


R.Varadarajan
ஜூன் 23, 2025 04:13

ஈரானுக்கும் இஸரேலுக்கும் எல்லைத்தகராறா அல்லது வாயக்கால் தாவாவா? கொழுப்பெடுத்து இஸ்லாமிய உலகின் ஒரே தாதா என நினைத்து பாலஸ்தீனிய ர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேண்டாத கொள் ளிக்கட்டையை எடுத்து தலையில் வைத்துக்கொண்டது.


பேசும் தமிழன்
ஜூன் 22, 2025 19:50

ஏண்..... நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியது சரி.... அவர்கள் திருப்பி தாக்கினால்.... கண்டனமா ???


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 15:11

இஸ்ரேலிய வெறுப்பு இவர்களை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.


RAMESH
ஜூன் 22, 2025 12:23

இதை சொல்ல இவர்களுக்கு அருகதை இல்லை.......இந்த ஈரான் அறிக்கையை தமிழகத்தில் இருக்கும் சில உண்டியல் குலுக்கி பயல்கள்.....


BALAMURUGAN G
ஜூன் 22, 2025 12:08

ஹிஸ்புல்லா அமைப்பை உருவாக்கியதே ஈரான் அரசுதான். ஈரான் ராணுவத்தின் ஒரு பகுதியாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வந்தது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஐர்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது அந்த பேஐர்களை பயன்படுத்தி வந்த ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ஈரான் தூதர் ஒருவரும் பாதிக்கப்பட்டதில் இருந்தே நாம் புரிந்துக் கொள்ளலாம். அதோடு, ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹவுதீஸ் தீவிரவாதிகளுக்கும் சகல உதவிகளையும் செய்து வந்தது ஈரான் அரசு. கடந்த 46 ஆண்டுகளாக ஈரான் தேசத்தின் சாமானிய மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த வெறியர்களிடம் சிக்கி சீரழிந்து வருகின்றனர். எனவே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதீஸ் மற்றும் இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தந்த ஈரான் என அனைத்து விஷச் செடிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து வருகின்றனர். இது அகில உலகிற்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை


Rajamani K
ஜூன் 22, 2025 11:28

கருத்தை எதிர்பார்த்து, உபிஸ்கள் காத்து கொண்டிருக்கின்றனர்


raja
ஜூன் 22, 2025 11:10

கர்ணன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் துரியோதனனுக்கு துணை போனதால் அழிந்தான்.. அதுபோல ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு துணை போன ஈரானும் சேர்ந்து அழியும்....


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 16:27

சரியா சொன்னீங்க , ஆனால் ங்கே கர்ணன் இரான் , துரியோதனன் அமேரிக்கா என்றும் கொள்ளலாம் சதாம் உஷைன் அழியும் வரை இரான் வேண்டியிருந்தது , இப்போ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை