உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு

அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், ஐ.நா.,வின் பொருளாதார தடைகளை தொடரவும் அழைப்பு விடுத்ததால், டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு 8.5 லட்சமாக சரிந்தது.மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள டிரம்ப், தன்னை படுகொலை செய்வதற்கு ஈரான் முயற்சிப்பதாக சமீபத்தில் கூறினார்.அவ்வாறு ஈரான் செய்தால் அந்நாடே அழிக்கப்படும், எதுவும் மிச்சமிருக்காது என்றவர், ஈரானுக்கு அதிக அழுத்தங்களை தரும் படி உத்தரவிட்டார். அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை உலக நாடுகள் வாங்க வேண்டாம் என அழைப்பு விடுத்தார். மேலும், ஈரான் மீதான ஐ.நா.,வின் பொருளாதார தடைகளை அமெரிக்காவும் தொடரும் என்றார்.டிரம்பின் இந்த நடவடிக்கையால், ஈரான் பணமான ரியாலின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. ஈரானில் மூன்று வகையான பண பரிமாற்ற மதிப்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒன்று திறந்த சந்தை மதிப்பு, இரண்டாவது அதிகாரப்பூர்வ மதிப்பு, மூன்றாவது ஈரான் ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தும் 'நிமா' எனப்படும் அன்னியச் செலாவணி மேலாண்மை ஒருங்கிணைந்த அமைப்பு.இந்த 'நிமா' அமைப்பின் படி ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கடந்த மாதத்தில் 7 லட்சமாக இருந்தது. தற்போது அது 8 லட்சம் ஈரான் ரியாலாக உயர்ந்துள்ளது. இதனால், ஈரான் பொருளாதாரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pmnr pmnr
பிப் 06, 2025 09:46

சூப்பர்


Kasimani Baskaran
பிப் 06, 2025 07:31

டிரம்ப் இந்தியாவையும் கூட ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்கலாம்.


raja
பிப் 06, 2025 06:18

என்னது ஒரு டாலருக்கு எட்டு லட்சம் ரியாலா... சூப்பர்.. இந்திய ரூபாய் வெறும் 82...


Kasimani Baskaran
பிப் 06, 2025 07:29

1947ல் சுதந்திரம் வாங்கும் பொழுது ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்தது. இந்தியாவை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் அதை சீரழிப்பதில் பெரும்பங்கு வகித்தது. அதிக வீழ்ச்சி அடைந்தது பொருளாதார புலிகள் ஆண்ட காலத்தில்த்தான்.


சமீபத்திய செய்தி