உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!

ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் 'ஈரான் அணுசக்தியை அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது; அது எங்களை குறிவைக்கும்' என்று, இஸ்ரேல் கூறியது. இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது.ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறுகின்றன. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது ஈரான் அணுஆயுத திட்டங்களை சீரமைத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் பார்லிமென்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sasikumaren
ஜூலை 03, 2025 02:35

உலக நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வீரம் என்று சொல்லி மக்களை கொல்லும் கூட்டம் தான் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இவன்களை அழித்தொழிக்க வீரம் மிகுந்த நாடுகளிடம் அணு ஆயுதங்கள் வைத்து கொள்ள எவன் அனுமதி வேண்டும்


தியாகு
ஜூலை 02, 2025 18:41

உலகத்தில் யாரிடம் வேண்டுமானாலும் அணு ஆயுதம் இருக்கலாம், அவர்கள் போரில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் மூர்க்கர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் மூர்க்க கூட்டம் பிற மதத்தினரை அழிக்க பயன்படுத்துவார்கள். அதனால்தான் மூர்க்க கூட்டமான ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது.


போராளி
ஜூலை 03, 2025 19:49

போடா போ ...


Tirunelveliகாரன்
ஜூலை 02, 2025 17:04

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை அழித்து விட்டு இந்த ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் என்று தெரிகிறது.


சமீபத்திய செய்தி