உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்தது என்ன?: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் அதிபர்: சதிவேலை காரணமா என அரசு தீவிர விசாரணை

அடுத்தது என்ன?: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ஈரான் அதிபர்: சதிவேலை காரணமா என அரசு தீவிர விசாரணை

டெஹ்ரான்: ஹெலிகாப்டர் விபத்தில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு உறுதி செய்தது. விபத்துக்கு சதிவேலை காரணமா என விசாரணை நடக்கிறது. இடைக்கால அதிபராக, முதல் துணை அதிபர் முகமது மோஹ்பைர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அடுத்த 50 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதால், ஈரானில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முஸ்லிம் பெரும்பான்மையினராக உள்ள மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக, 2021ல் பதவியேற்ற இப்ராஹிம் ரைசி, 63, அந்த நாட்டின் உயர் மதத் தலைவரான அயதுல்லா அலி கொமோனிக்கு மிகவும் நெருக்கமானவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oyghmzfw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொமோனிக்கு அடுத்ததாக, நாட்டின் உயரிய மதத் தலைவராக அவர் பதவியேற்பார் என்று கூறப்பட்டு வந்தது.நேற்று முன்தினம், ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இப்ராஹிம் ரைசி பயணம் செய்தார். அவருடன், வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிர் அப்தொலஹின் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.நாட்டின் வடமேற்கே, மலைகள் நிறைந்த பகுதியில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.நீண்ட தேடுதலுக்குப் பின், அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முழுதும் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில், அதிபர் இப்ராஹிம் ரைசி உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக, ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல் துணை அதிபரான முகமது மோஹ்பைர், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, ஈரான் மதத் தலைவர் கொமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.இதைத் தொடர்ந்து, அடுத்த 50 நாட்களுக்குள், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.பல சர்ச்சைகளுக்கு பெயர்பெற்ற அதிபர் ரைசியின் மறைவுக்கு, பல நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் பலர் வருத்தம் தெரிவித்தாலும், சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தீவிர மதப்பற்றாளரான ரைசி, 1980களில், நீதித்துறையில் பணியாற்றியபோது, ஈரான் - ஈராக் போரின்போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோரை எந்த விசாரணையும் இல்லாமல் கொல்வதற்கு உத்தரவிட்டார்.இதனால், டெஹ்ரான் கொலைகாரர் என்று அவர் அழைக்கப்பட்டார்.கடந்த 2022ல், ஷியா மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ள ஈரானில், ஹிஜாப் எனப்படும் முகத்தை மூடும் துணியை அணிய வேண்டும் என்பதை, அதிபர் இப்ராஹிம் ரைசி கட்டாயப்படுத்தினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாஷா அமினி என்ற இளம் பெண் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுதும் போராட்டங்கள் தீவிரமாகின. போலீஸ் அடக்குமுறையில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 22,000த்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் மற்ற நாடுகளின் ஆதரவு இல்லாததால், எண்ணெய் வளம் அதிகம் இருந்தும், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.இவ்வாறு பல வகைகளில் பாதிக்கப்பட்டதால், மக்கள் கொதிப்புடன், பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்தது. உக்ரைனுக்கு எதிராக போரிடும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்பியது, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது என, மேற்காசிய பிராந்தியத்தில், ஈரானின் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்தன.இந்த சூழ்நிலையில், இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது, சில தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பல இடங்களிலும், பல நாடுகளிலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் அதிபரின் மறைவு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியின் மறைவு, மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த சோகத்தையும், ஏற்படுத்துகிறது. இந்தியா - ஈரான் இடையிலான இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கு, அவர் ஆற்றியுள்ள அளப்பரிய பங்கு மகத்தானது. அவர் என்றென்றும், நினைவு கூரப்படுவார்.என் இதயப்பூர்வமான இரங்கலை, அவரது குடும்பத்திற்கும், ஈரான் மக்களுக்கும், தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான துயரமான சூழ்நிலையில், ஈரானுடன் இந்தியா கரம் கோர்த்து, உறுதியுடன் நிற்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் இந்தியாவுக்கான ஈரான் துாதரகம் உள்ளது. இங்குள்ள ஈரான் தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரைசியின் மறைவையொட்டி, இன்று ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஈரானில் அரசியல் மாற்றம் ஏற்படுமா?

ஈரான் மதத் தலைவர் கொமேனிக்கு தற்போது, 85 வயதாகிறது. அவரது உடல்நிலை, கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு அடுத்து, நாட்டின் உயரிய பதவியாக கருதப்படும் மதத் தலைவர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.நீண்ட கால ஆதரவாளரும், தான் விரும்பியதை நிறைவேற்றி வருவதாலும், இப்ராஹிம் ரைசியே அந்த இடத்துக்கான தேர்வில் முன்னிலையில் இருந்தார். தற்போது அவருடைய மறைவைத் தொடர்ந்து, கொமோனியின் மகன் மோஜ்தபா கொமேனிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரான் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, முதல் துணை அதிபரான முகமது மோஹ்பைர், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு, கொமேனி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்த 50 நாட்களுக்குள், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மோஹ்பைர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.ரைசியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டில் உடனடியாக எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படாது என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 'யாருக்கும் எந்தக் கவலையும் வேண்டாம். அரசு நிர்வாகம் வழக்கம் போல் இயங்கும்' என, ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட பின், கொமேனி கூறினார்.சமீபத்தில் நடந்த தேர்தலில், ரைசி வெற்றி பெற்றார். ஆனால், இந்தத் தேர்தலில் மிகவும் குறைந்த ஓட்டுப் பதிவே நடந்தது. இது ரைசி மீதான மக்களின் எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது. அதனால், அதிபர் பதவிக்கு அடுத்து நடக்கும் தேர்தல், மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மதத்தின் அடிப்படையில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதற்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொருளாதார பாதிப்பு போன்றவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அரசியலிலும் உடனடியாக ஈரான் தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, ஈரானில் மாற்றம் ஏற்படுமா; சர்வதேச உறவுகளில் மாற்றம் ஏற்படுமா என்பது தெரியவரும் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை