உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது ஈராக்; 9 வயது முதல் திருமணம்!

குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது ஈராக்; 9 வயது முதல் திருமணம்!

பாக்தாத்: ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.சமீபத்தில், ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்தது. ஆனாலும், பெண்கள், மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும். அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.இந்நிலையில், குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 18 வயதில் இருந்து, 9 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. நீதியை மேம்படுத்துவதற்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கை தான் இந்த சட்டம் என ஈராக் பார்லிமென்ட் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்துக்கு பெண் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குழந்தை திருமண சட்டத்திற்கு ஈராக் ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Indhiyan
ஜன 25, 2025 07:44

வளர்ப்பு மகளை கல்யாணம் செய்து குடும்பம் நடத்துதல் - பெரியார் மாடல்


RAJ
ஜன 24, 2025 16:40

அடுத்தது என்ன பிறந்தவுடனே திருமணம்


Nandakumar Naidu.
ஜன 23, 2025 22:58

மிருகங்கள்.


Seitheee
ஜன 23, 2025 22:23

எனக்கு தெரிந்த பல இஸ்லாமியர்கள் இந்த சட்டத்தை வரவேற்க மாட்டார்கள். பால்ய விவாகம் இந்தியாவில் நடை முறையில் இருந்தது. ஆனாலும், பெண் வயது வந்த பின் தான் கணவனின் இல்லத்திற்கு அனுப்பி வைப்பார்கள். ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டும். ஒரு வேண்டுகோள். கருத்து சொல்பவர்கள் மதத்தை குறிவைக்காமல், மற்ற மதங்களை புண் படுத்தாமல் கருத்து தெரிவித்தால் நல்லது.


Mohan
ஜன 23, 2025 21:35

வன்முறையே எல்லாவற்றிற்கும் தீர்வு என மனப்பூர்வமாக நம்பும் மனசாட்சியற்ற அமைதி மார்க்க முர்க்கர்களின் கூட்டம் இப்படி தான் செய்யும். இங்குள்ளவர்களும் இதைதான் விரும்புவார்கள்


Bye Pass
ஜன 23, 2025 20:28

அந்த பகுதிகளில் குறிப்பாக குர்திஷ் போன்ற இடங்களில் ஐந்து ஆறு வயது பெண் குழந்தைகள் மாதவிடாய் துவங்கி விடுவது சர்வசாதாரணம் ..இரானிலும் அதே நிலைமை ...வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்ள ஈரானில் எந்த தடையும் இல்லை ..


Mohan
ஜன 23, 2025 20:25

உலகத்தின் மிக முன்னேறிய ""சகோதரத்துவமும்"" ""சமத்துவமும்"" மிகுந்த ""அமைதி"" முர்க்கரின் மதம். சாரி ,... மார்க்கத்தின் மதம். எல்லோரையும் அணைத்து கொல்லும் மதம்.. வாழுவோம், மற்றவரை வாழவிடமாட்டோம் என்பவர்களின் செயல். சகிப்புணர்வே இல்லாதவர்களின் சட்டம்.. பெண்களை தூசிய விட கேவலமாக நடத்தும் கும்பல்.


தாமரை மலர்கிறது
ஜன 23, 2025 20:04

இதற்கு அறிவியல் ரீதியாக முட்டுக்கொடுக்க நம்மூர் மூர்க்கத்தினர் வருவார்கள் .


பேசும் தமிழன்
ஜன 23, 2025 18:46

அடப்பாவிகளா..... குழந்தைகளை கூட விட்டு வைக்க மாட்டார்கள் போல ???


Rasheel
ஜன 23, 2025 17:51

பகுத்தறிவு மூடி கொண்டு உள்ளது. பெண்களை பிள்ளை பெறும் இயந்திரம் மற்றும் அனுபவிக்கும் காட்டுமிராண்டித்தனமான எண்ணம் எப்போது தான் மாறுமோ