உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவின் அடுத்த பிரதமர் ஆவாரா அனிதா ஆனந்த்?

கனடாவின் அடுத்த பிரதமர் ஆவாரா அனிதா ஆனந்த்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்து யார் அப்பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக தந்தை - பஞ்சாப் தாயாருக்கு பிறந்த அனிதா ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அவர் சார்ந்த லிபரல் கட்சி எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து அவர் நேற்று( ஜன.,06) கட்சித் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவர் தேர்வாகும் வரை, பதவியில் நீடிப்பேன் எனக்கூறியிருந்தார். இந்தாண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்து கனடாவின் புதிய பிரதமர் ஆக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்தது. இதில், அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

யார் இவர்

இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்(57). 2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.

படிப்பு

இவர் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி,ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்புடல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்புடொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.யேல் பல்கலையில் சட்டப்படிப்பு பேராசரியராக பணிபுரிந்தார். பிறகு அரசியலுக்குள் நுழைந்தார்.

அரசியல் அனுபவம்

கோவிட் பரவலின் போது, பொது சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக இருந்தபோது தடுப்பூசி கொள்முதல் உள்ளிட்ட அவர் ஆற்றிய பணிகளுக்காக பாராட்டுகளை பெற்றார். 2021 ல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார். அப்போது ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டார். கனடா ஆயுதப்படைகளுடன் அவருக்கு சிறிய பிரச்னை ஏற்பட்டது. இதன் பிறகு அவர் கருவூல வாரியத்துறைக்கு மாற்றப்பட்ட இவர், கடந்த டிச., மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இவர்களை தவிர்த்து நிதியமைச்சர் கிறிஸ்டினா ப்ரீலாண்ட், கனடா வங்கி முன்னாள் கவர்னர் மார்க் கார்னே, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்கோயில் பிலிப்பே ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Kamal
ஜன 07, 2025 19:38

இப்போதான் கமலஹாரிஸ் புயல் ஓய்ந்தது மீண்டும் அனிதா ஆனந்த் புயலா ?


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 17:28

அனிதா ஆனந்த் பிரதமர் ஆனால் என்ன ஆகாவிட்டால் நமக்கு என்ன. கனடா இந்தியா அல்லவே அல்ல. இந்தியாவில் தான் இத்தாலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவரை பிரதமராக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே திரியும் கூட்டம் உண்டு. ஓங்கோல் தெலுங்கை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குவர். அவர் கனடா பெண் கனடா பிரதமர் ஆவதில் தவறேதுமில்லை


Sampath Kumar
ஜன 07, 2025 14:21

கனடா நாட்டு மக்கள் இந்தியர்கள் அல்ல இவரை ஏற்க மாட்டார்கள்


Barakat Ali
ஜன 07, 2025 15:25

இத்தாலி பாஸ்போர்ட் வைத்துள்ள சோனியா, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டும் வைத்துள்ள ராகுல் இந்தியர்களா ??


Kumar Kumzi
ஜன 07, 2025 15:43

அதுசரி நாம எப்போதுமே ஓங்கோல் துண்டுசீட்டு வாசிக்க தெரியாத கூமுட்டைக்கு தானே ஓட்டு போடுவோம்....த்தூ கொத்தடிமையே


sundarsvpr
ஜன 07, 2025 13:53

தமிழ்நாட்டு முன்னாள் தலைமை அமைச்சர் முத்துவேல் கருணாநிதி போல் குடும்ப ஆட்சியை கொணரும் சாமர்த்தியம் உள்ள தலைவர் எல்லா நாடுகளிலும் தேவை என்பது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல கடமை கூட தலைமையை விமர்சிக்கும் தைரியம் இல்லாமல் இருந்திட வைத்திருக்கும் கட்டுப்பாடு மிக முக்கியம். கண்ணியம் என்பது பேச்சுஅளவில் இருக்கவேண்டும் எல்லா நாட்டு அரசுகளும் தமிழ்நாட்டிற்கும் புனித யாத்திரை மேல்கொள்வது நல்லது.


புதிய வீடியோ