உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்

இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்

பெய்ரூட் : லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்த போர் நிறுத்தப்பட்டதால், புலம் பெயர்ந்த மக்கள், எல்லை பகுதிக்கு திரும்பத் துவங்கினர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்டோபரில் போர் துவங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போர் உருவானது.

ஆதரவு

இந்நிலையில், அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.கடந்த 14 மாதங்களாக மும்முனை தாக்குதல்களை இஸ்ரேல் சந்தித்து வந்தது. ஒரு பக்கம் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாக ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது. அதன் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர்.இந்த மும்முனை போரால், மேற்காசியாவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொண்டன.

எச்சரிக்கை

இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புகள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டன. இதற்கான உடன்பாடு ஏற்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்தது.இதையடுத்து, லெபனானின் தென் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், அங்கு திரும்புவதற்கு தயாராகினர். தங்களுடைய உடைமைகளுடன், கார்கள் மற்றும் வேன்களில் மக்கள் சாரை சாரையாக, பெய்ரூட்டில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் குவிந்தனர்.'புலம் பெயர்ந்தவர்கள் உடனடியாக தென் பகுதிக்கு திரும்பக் கூடாது' என, இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது. 'தென் பகுதியில், இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதால், அங்கு திரும்ப வேண்டாம்' என, புலம் பெயர்ந்தவர்களுக்கு, லெபனான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.ஆனால், இந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளி, மக்கள் சாரை சாரையாக திரும்பி வருகின்றனர். இதுபோல, இஸ்ரேலிலும், தென் பகுதிக்கு புலம் பெயர்ந்த எல்லையோர மக்கள், வடக்கு நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளனர்.கடந்த 14 மாதங்களில், லெபனானின் தென் பகுதியில் இருந்து, 12 லட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். அதுபோல, இஸ்ரேலின் வடக்கு பகுதியில், எல்லையை ஒட்டி வசித்து வந்த 50,000 பேர் இடம் பெயர்ந்தனர். இஸ்ரேல் தாக்குதல்களில், லெபனானில் 3,700 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தரப்பில் 130 பேர் உயிரிழந்ததாக ஹெஸ்பொல்லா கூறுகிறது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

1அடுத்த 60 நாட்களுக்கு, இரு தரப்பும் எந்தத் தாக்குதல்களையும் நடத்தக் கூடாது. லெபனானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் படைகள், தங்களுடைய எல்லைக்கு திரும்ப வேண்டும்.2லெபனானின் தென் பகுதியில் இருந்து ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் வெளியேறுவர். அந்தப் பகுதியில் லெபனான் ராணுவமும், ஐ.நா., அமைதிப் படையும் பாதுகாப்புப் பணியில் இருக்கும்.3இந்த ஒப்பந்தங்களை இரு நாடுகளும் நிறைவேற்றுவதை, அமெரிக்கா தலைமையிலான குழு கண்காணிக்கும்.4இந்த ஒப்பந்தங்களை மீறி, ஹெஸ்பொல்லா தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்போம் என்ற இஸ்ரேலின் நிபந்தனையை, எதிர் தரப்பு ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
நவ 28, 2024 20:13

கருப்பு கல் கட்டிடத்தை தரைமட்டம் ஆக்கினால் தவிர உலகில் அமைதி நிலவ வாய்ப்பில்லை.... மூர்க்க மார்க்க குழந்தை கூட கொலை வெறியோடு தான் இருக்கும்...௧௬௦௦ (1,600) ஆண்டு காலமாக ஊறிப்போன வன்முறை வெறி.. மிருகத்தனமான முறையில் தான் அடக்க வேண்டும்.


kulandai kannan
நவ 28, 2024 19:23

Most dangerous job in the world is the Chief of Hezbolla. உடனே இஸ்ரேல் மோப்பம் பிடித்து...


SUBBU,
நவ 28, 2024 17:03

ஆனானப்பட்ட ஈரானின் தலைமைத் தலைவரே இஸ்ரேல் அடிக்கு பயந்து கோமாவில் விழுந்து பாதாள அறையில் பம்மிக் கிடக்கிறார். இதுல ஹிஸ்புல்லாக்களின் அடி தாங்காமல் இஸ்ரேல்தான் சமாதானத்தை நாடியுள்ளதாம். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களையும் அவர்களது பதுங்குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளையும் முற்றிலுமாக நொறுக்கிப் போட்ட இஸ்ரேலின் ராணுவம் ஆயிரக் கணக்கான ஹிஸ்புல் தீவிரவாதிகளையும் கொன்று குவித்து ருத்ர தாண்டவம் ஆடிவிட்டது. அவர்களின் கட்டிடங்களை சுக்கு நூறாக நொறுக்கிப் போட்டு அந்த பகுதியையே குப்பை கூளமாக்கி விட்டது. அதனால் எஞ்சியுள்ள ஹிஸ்புல்லாக்கள் போரிடுவதற்கு ஆயதங்கள் ஏதுமின்றி இஸ்ரேலிடம் சரணடைந்து விட்டார்கள். ஆனால் இங்கு கருத்தை பதிவிட்ட நண்பர் இஸ்ரேல்தான் ஹிஸ்புல்லாக்களிடம் சரணடைந்து விட்டதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது.


kulandai kannan
நவ 28, 2024 11:55

எங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தால்... என்று ஆர்பரிப்பவர்கள் லெபனானுக்கோ, காஸாவுக்கோ போவதுதானே!!


karupanasamy
நவ 28, 2024 09:50

பயங்கரவாத்தைப் பரப்பும் மனநலத்திற்கு எதிரான அந்த புத்தகத்தை தடைசெய்து அதை எழுதியவரின் முகமூடியை விலக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்.


veeramani
நவ 28, 2024 09:15

இசுரேலியர்கள் ....உலகத்தில் பாவப்பட்டவர்கள் ....இன்றுவரை இசுரேலியர்களை கடத்திய தீவிரவாத ஹமாஸ் அவர்களை விடுவிக்கவில்லை , ஆனால் உலகநாடுகள் இஸ்ரேலை வம்பு பண்ணி போர்நிறுத்தம் செய்யவைத்துள்ளனர் . எவராவது கடத்தப்பட்ட மக்களை பற்றி கவலைப்படவில்லை. நிச்சயம் அவர்கள் கொல்லப்பட்டிருப்பர்கள் . இஸ்ரயேலின் தியாகம் மிக பெரி யது


SUBBU,
நவ 28, 2024 07:42

The Lebanese army will deploy 10,000 soldiers across southern Lebanon. If they fail in their job of keeping Hezbollah out, Israel is well prepared to go back to war, Things will never look the same again, and time will tell if I am correct. Dont forget this ceasefire was forced. Come January 20th, everything changes.


Kasimani Baskaran
நவ 28, 2024 06:26

இஸ்ரேலுடன் மல்லுக்கட்டி ஜெயிக்க வாய்ப்பில்லை. ஆகவே முல்லாக்கள் காலுக்கிடையில் புகுந்து மன்னிப்புக்கேட்டு தாங்கள் வஸ்த்தாது இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டார்கள். ஈரான் பெரிய அளவில் அடிவாங்காமல் தப்பியது யாரோ செய்த புண்ணியம்.


Bahurudeen Ali Ahamed
நவ 28, 2024 11:53

ஹிஸ்புல்லாக்களின் அடி தாங்கமுடியாமல் இஸ்ரேல்தான் சமாதானத்தை நாடியுள்ளது, பதிவை ஒழுங்காக படிக்கவும், எதிர்தரப்பு இந்த சமாதான நடவடிக்கையை ஏற்கவில்லை என்றுள்ளது பதிவு, ஹமாஸுடனான சமாதான நடவடிக்கைதான் போரின் முடிவாக இருக்கும்


Nandakumar Naidu.
நவ 28, 2024 02:36

இந்த மனித குலத்தின் ஜனம எதிரிகளை (தீவிரவாதிகள்) நம்பக்கூடாது. போர் நிறுத்தம் என்ற பெயரில் அடுத்த தாக்குதலுக்கு தயார் செய்து கொள்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை