உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்

இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும்'' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இங்கு போர் நிறுத்தம் அமலுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.அதிபர் டிரம்ப் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசாவின் ஒருசில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை ஹமாஸ் அமைப்பினரிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம். காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 21:12

காசா என்ன, கார்கில் போரை கூட இவர் தான் நிப்பாட்டினார் என்று சொல்லிக் கொள்வார். அதையும் கை தட்டி வரவேற்க ஆட்கள் இருப்பார்கள்


N S
அக் 05, 2025 11:57

காசாவில் போர் நிறுத்தம் நடந்த உடனே அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு கானல் நீர் கிடைக்கப்போகிறது.


Apposthalan samlin
அக் 05, 2025 11:44

english இல் ஜேக்கப் தமிழ் இல் யாக்கோபு அரபிக் இல் யாகூ . யாகூ என்றால் இஸ்ரேல் என்று அர்த்தம். இவர்கள் பூர்விக இடம் தான் இப்பொது உள்ள இஸ்ரேல் இது எல்லாம் பைபிள் குர்ஆனில் இருக்கிறது. முஸ்லீம் கிறிஸ்டின் அண்ணண் தம்பிகள் ஏன் அடித்து கொள்கிறார்கள் ?ஐசக் என்பவருக்கு ரெண்டு பிள்ளைகள் இஸ்மாயில் முஸ்லீம் இளைய மகன் ஜேக்கப் கிறிஸ்டின் .


ஆரூர் ரங்
அக் 05, 2025 09:32

யூதர்களை முழுவதும் அழிப்பது புத்தகக் கட்டளை என தோன்றுகிறது ஹமாஸ் திருந்த வாய்ப்பில்லை.


Field Marshal
அக் 05, 2025 10:30

இவுங்க ஒருத்தருக்கொருத்தர் காலம்காலமா அடிச்சுப்பாங்க ...


SUBBU,MADURAI
அக் 05, 2025 10:54

உலகமே அழிந்தாலும் யூத இனமும் இஸ்ரேலும் அழியாது.இதை படித்தவுடன் போலி பெயர்களில் கருத்தை பதிவிடும் மூர்க்கன்கள் எப்படி டிசைன் டிசைனா இங்கே வந்து கதறப் போகிறான்கள் என்பதை சற்று ஓரமாக நின்று கவனிப்போம்....


K.Ravichandran, Pudukkottai
அக் 05, 2025 09:29

டிரம்ப் அமெரிக்க அதிபரா? இல்லை இஸ்ரேலின் செய்தி தொடர்பாளரா? ஒரே ஒரு நோபல் பரிசு மேல ஆசப்பட்டு என்னவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு?


ராமகிருஷ்ணன்
அக் 05, 2025 09:24

அதெல்லாம் நடக்காது டிரம்பு. ஹமாஸ் கும்பல் அங்கிருந்து முழுவதும் அழிக்கப்படும் வரைக்கும் பிரச்சனை தீராது, தங்களை தயார்படுத்திக் கொள்ள அவகாசம் தேவை என்பதால் பம்மாத்து செய்கின்றனர்.


c.k.sundar rao
அக் 05, 2025 09:16

Send one nobel prize to Donald duck trump.


புதிய வீடியோ