உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு

ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது: சொல்கிறார் பிரதமர் நெதன்யாகு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது'' என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகி உள்ளது. இது தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் அழித்தது. ஈரானுக்கு எதிரான போரில் அணுசக்தி திட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை நாங்கள் முறியடித்துவிட்டோம். ஈரானில் யாராவது அதை மீண்டும் கொண்டு வர முயற்சித்தால், எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க அதே உறுதியுடன், அதே தீவிரத்துடன் செயல்படுவோம்.ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட்டு உள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், வரலாற்றில் பதிவு செய்யப்படும். உலகம் முழுவதும் உள்ள படைகளால் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு நெதன்யாகு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:44

ஒரு அரபு நாடும் ஈரானை ஆதரித்து கூட்டு சேரவில்லை. இங்குள்ள வேலையற்ற மூர்க்க கூட்டம்தான் கூவுது.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:17

வசதியான வளைகுடா நாடுகளின் தெருக்களில் ஈரானியர்கள் பிச்சை எடுப்பதைக் காணலாம். சம்பந்தமில்லாத பாலஸ்தீன பிரச்சனையில் தலையிட்டு வேண்டாத சண்டையை விலைக்கு வாங்கி சாமானிய மக்களை அல்லாடவிடும் அலி கோமேனி கும்பலை ஈரானை விட்டு ஒழிக்க வேண்டும்.


Senthoora
ஜூன் 25, 2025 16:55

உங்களுக்கு பூரணித்தது அவளவுதான்,


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 12:29

ஈரானை யாராலும் முழுமையாக அழிக்க முடியாது. ஈரானை மத பழைமை வாதிகள் ஆளும்வரை இஸ்ரேலை தாக்காமல் இருக்க மாட்டார்கள். பரஸ்பர அவநம்பிக்கை உள்ளவரை சண்டை நிற்காது. பாவம் சாமானிய மக்கள்.


nisar ahmad
ஜூன் 25, 2025 11:07

மீண்டும் ஒரு காட்டு காட்ட வேண்டும் ஈரான்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 14:09

எழுபது சதவீத மக்கள் அடிமட்ட வாழ்க்கை வாழும் நாட்டுக்கு போர் பேராசை எதற்கு? ஷியா பிரிவையே இஸ்லாமியராக ஏற்காத , மனிதராய்க் கூட மதிக்காத SUNNI பாலஸ்தீன ஆட்களுக்கு ஆயுதமளித்து தூண்டிவிட்டு அழியச் செய்வது அமைதி மார்க்க வழியா? (உங்கள் பகுதி மசூதியில் ஷியா மார்க்க மக்களுக்கு தொழுகை அனுமதியுண்டா?)


Nagarajan D
ஜூன் 26, 2025 13:03

என்னத்த காட்டவேண்டும்?


Senthoora
ஜூன் 25, 2025 10:15

பொய் சொல்ல ஒருளவு வேணும், ஆள் இல்லாத கடையில் டீ அதிட்டுவந்திருக்காங்க. சரி உண்மை அப்படியானால் இனி யுத்தம் வேண்டாமே.


Nagarajan D
ஜூன் 25, 2025 08:49

இஸ்ரேல் அரசுக்கு ஒரு எச்சரிக்கை... இந்த அமெரிக்கா கிறுக்கனுங்க அவனுங்கள விட நீங்க அதாவது இஸ்ரேல் வலிமையான தேசமா உருவாக விடமாட்டானுங்க... அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அவனுங்களே ஈரானுக்கு அணுஆயுதம் செய்ய தேவையான அனைத்தையும் செய்வானுங்க.. பாரத தேசத்துடன் போரில் தோற்ற பாகிஸ்தான் தேசத்தின் ராணுவ தளபதியை அழைத்து விருந்து கொடுத்து உபசரிக்கிறானுங்களே இவனுங்க எல்லாம் என்ன வகை


Nada Rajan
ஜூன் 25, 2025 08:37

ஈரான் பாடு பெரும் பாடு..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை