உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்க லெபனானுக்கு வாய்ப்பு தந்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்க லெபனானுக்கு வாய்ப்பு தந்த இஸ்ரேல்

ஜெருசலேம்: ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை நிராயுதபாணியாக்கினால், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்று, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கி வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையேயும் போர் மூண்டது. இதில், லெபனானில் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அரசு முடிவு செய்தது. இதன்படி ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளிடம் உள்ள ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார். ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்கினால், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி