உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி; தற்காலிகமாக கைவிட்டது கத்தார் அரசு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி; தற்காலிகமாக கைவிட்டது கத்தார் அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கத்தார் அரசு, தற்காலிகமாக அந்த முயற்சியை நிறுத்தி வைத்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஒரு ஆண்டாக போர் நடக்கிறது. இதில் இஸ்ரேலில், 1,500 பேரும், காசாவில், 43,000 மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான மத்தியஸ்தராக மற்றொரு மேற்காசிய நாடான கத்தார் ஈடுபட்டு வந்தது.இதற்கிடையே நேற்று முன்தினம் காசாவில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஹமாஸ், இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்வதை கத்தார் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இது குறித்து கத்தார் அதிகாரிகள் கூறியதாவது: காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே செய்து வந்த மத்தியஸ்த முயற்சியில் இரு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டவில்லை. எனவே மத்தியஸ்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகளிடமும், ஹமாஸ் உறுப்பினர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iniyan
நவ 11, 2024 10:01

கட்டார் ஒரு பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடுடைய நாடு. டிரம்ப் அளிக்கும் அழுத்தத்தின் காரணமாக இந்த வேஷம் போடுகிறது. கத்தார் மலேசியா துருக்கி ஆகிய நாடுகளை நம்ப முடியாது.


N.Purushothaman
நவ 11, 2024 06:51

ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மழுங்கடிக்க செய்வதாக கத்தார் கூறி உள்ளது ... அது மட்டும் இல்ல கத்தார் நாட்டில் மிகவும் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவும் பிறப்பித்து உள்ளது .....


MUTHU
நவ 11, 2024 10:20

போர்க்களத்தில் இருக்கும் ஹமாஸுக்கும் கத்தாரில் இருக்கும் ஹமாஸுக்கும் பல மாதங்களாக எந்த தொடர்பும் இல்லை. அல்லது இஸ்ரேல் துண்டித்து விட்டது. hanieh இறந்த பின் ஹமாஸ் முற்றிலும் தொடர்பின்றி விட்டது. ஆனாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட வழிகாட்டுதல்களின்படி ஹமாஸ் போராளிகள் செயல்பட்டு போரிட்டு கொள்கின்றனர். போர்க்களத்தில் இருப்பவர்களால் எந்த புதிய முடிவும் எடுக்க முடியாமல் போய்விட்டது. இஸ்ரேலின் தேவையும் அதுவே. போர் நிறுத்தம் ஏற்பட்டால் இஸ்ரேலின் நோக்கம் நிறைவேறாது. அதற்கேற்றாற்போல் கத்தார் நாட்டில் இருந்த ஹமாஸின் தொடர்பாளர் என்று சொல்லிக்கொண்டவர்களும் நடந்து கொண்டது இஸ்ரேலுக்கு வசதியாய் போய் விட்டது. காசாவை சல்லி சல்லியாக்கி விட்டது.


visu
நவ 11, 2024 06:51

பிணைய கைதிகளை விடுவித்து ஹமாஸ் தீவிரவாதிகள் சரணடைந்தால் உடனடி போர் நிறுத்தம் ஏற்படும் அக்டோபர் 7 தாக்குதல் நடத்திய கொலைகள் சரனடியாவிட்டால் இஸ்ரேல் ஒருபோதும் போர்நிறுத்தம் செய்யப்போவதில்லை