உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகளை கைவிட மாட்டோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

பிணைக்கைதிகளை கைவிட மாட்டோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். மீட்கும் வரை நாங்கள் போரை நிறுத்த மாட்டோம்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.காசாவில் இஸ்ரேலுக்கு, ஹமாஸ் படையினருக்கும் இடையே, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலில் உள்ளவர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து சென்றுள்ளனர். அவர்களை மீட்டு வர இஸ்ரேல் பல்வேறு முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில், இஸ்ரேலில் பார்லிமென்டில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது: காசாவில் இருந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் வெளியே சொல்ல முடியாது. பிணைக்கைதிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிணைக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரும் வரை போரை நிறுத்த மாட்டோம். பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிணைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நாங்களை அவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ரகுவரன்
டிச 25, 2024 01:32

இச்சகத்துல்லோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே - நேதன் பென்சமியாகு


Murthy
டிச 24, 2024 14:00

போரை நடத்த சொல்லும் பொய்கள்...


SUBBU,
டிச 24, 2024 10:19

We are changing the face of the Middle East. Hamas and Hezbollah brought destruction upon themselves with their own hands. BENJAMIN NETANYAHU.


Kasimani Baskaran
டிச 24, 2024 09:58

இஸ்ரேல் அதன் குடிமக்கள் மீது வைத்திருக்கும் விசுவாசம் மலைக்க வைக்கிறது. எப்பேர்ப்பட்ட எதிர்ப்பு வந்தாலும் தொடர்ந்து போர் புரியும் இவர்களது குணம் பாராட்டத்தகுந்தது. சுற்றி இருக்கும் பல நாடுகளில் எத்தனையோ வகையான போராளிப் புழுக்கள் இருந்தும் இஸ்ரேலிடம் பருப்பு வேகாது என்பதை பல முறை நிரூபித்து இருக்கிறார்கள். ஈரானின் உள்கட்டமைப்புக்களை சீர் செய்ய முடியாத அளவுக்கு முழுவதுமாக ஏன் உடைக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு என்னால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. தானே வீழக்கூடிய வகையில் எதோ சிக்கலை உருவாக்கி வைத்திருக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. நவீன தீவிரவாதிகளாக ஈரான் மற்றும் சிரியா மீது ஒரு கண் இருப்பது நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கும்.


Bahurudeen Ali Ahamed
டிச 24, 2024 17:22

இஸ்ரேல் அதன் குடிமக்கள் மீது விசுவாசம் வைத்திருக்கிறதா? அதெல்லாம் ஒன்றுமில்லை பாலஸ்தீன் நிலத்தை திருட நினைத்து பாலஸ்தீனியர்களை குழந்தைகள் பெண்கள் என்றுகூட பார்க்காமல் கொன்று குவிக்கிறார்கள், பாலஸ்தீனியர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள், ஆக்டொபர் 7ல் தான் இந்த பிரச்சினை தொடங்கியதுபோல் சிலர் பைத்தியக்காரத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமியர்களின் மீதுள்ள வெறுப்பினால் யார் சரி யார் தவறு என்று யோசிக்காமல் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக சிலர் பேசுகிறார்கள், முதலில் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் பாலஸ்தீன் என்ற நாடு வேண்டுமென்று போராடுகிறார்கள் தவிர இஸ்ரேல் இருக்கக்கூடாது என்று போராடவில்லை, பாலஸ்தீன் தவறு என்றால் இந்தியா ஏன் பாலஸ்தீனை ஆதரிக்கிறது? 2 ஸ்டேட் பாலிசியை இந்தியாவும் ஆதரிக்கிறது அதாவது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன்


N Sasikumar Yadhav
டிச 24, 2024 09:53

நல்லவேளை சொந்த நாட்டின்மீது பற்றுக்கொண்ட மாண்புமிகு நெதன்யாகு பதவியில் இருக்கிறார் எதிர்கட்சிகளும் ஆதரவாக இருக்கின்றன . ஆனால் பப்பு மாதிரி எதிர்கட்சியாக இல்லை


Bahurudeen Ali Ahamed
டிச 24, 2024 13:03

என்னது சொந்தநாட்டின் மீதுள்ள பற்றா, அவர் பதவியின் மீதுள்ள பற்றால் இந்த தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார், இந்த தாக்குதல் நின்ற அடுத்தகணம் அவர் ஜெயிலில் இருப்பார் எதிர்க்கட்சிகளும் அதிகபட்ச இஸ்ரேலிய மக்களும் அவருக்கு எதிராக திரண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், செய்திகளை கொஞ்சமாவது படிங்க சார், ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலிய ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துகிறார்கள், ஆனால் ராணுவம் என்று சொல்லிக் கொள்ளும் இஸ்ரேலியர்கள் பேடிகள் போல் குழந்தைகள் பெண்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்


அப்பாவி
டிச 24, 2024 09:18

இரான் ஹெஸ்புல்லாவை கைவிட்டதற்கு காரணம் அமெரிக்கா உங்களை கைவிடும்கற அண்டர்ஸ்டேண்டிங் தான். எலான் மஸ்க்கை திருப்திப் படுத்துங்க.


Sakthi,sivagangai
டிச 24, 2024 10:25

அப்புசாமி உனக்கு உள்ளூர் அரசியலே தெரியாது இந்த லட்சணத்தில் உலக அரசியல பத்தி பேச வந்துட்ட வெளங்கிரும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை