உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி

போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்; அமெரிக்கா போர் நிறுத்தம் அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான் பின்னர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே மூண்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது, போர் நிறுத்தம் அமலாகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். அவரின் அறிவிப்பை ஈரான், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. போர் நிறுத்தம் தொடர்பான எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது.பின்னர், போர் நிறுத்தத்தை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மூலம் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்த தருணத்தின் போது, இன்று அதிகாலையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயம் அடைந்ததாகவும் அங்குள்ள மீட்பு சேவைகள் குழு அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஒரு கட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. 2 மணி நேரம் அலை, அலையாக வீசப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள முகாம்களை தாக்கின என்றும் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

நிவேதா
ஜூன் 24, 2025 13:17

இஸ்ரைல் போர்தொடுத்ததே ஈரானின் அணு சக்தியை ஒழிக்க தான். ஈரானின் எந்த அணு ஆயுதங்களும் செயலிழக்க செய்யப்படவில்லை. அமெரிக்கா தான் அணு ஆயுத கிடங்குகளை அழித்துவிட்டதாக சொன்னாலும் எந்த ஒரு கதிரலை கசிவுகளும் தென்படவில்லை. உண்மையில் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லையா அல்லது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயற்சி செய்தும் முடியவில்லையா என விளங்க வில்லை. பெரிய அண்ணன் அமெரிக்கா ஓடோடி வந்து சமாதானத்தை பற்றி பேசுகிறது. ஆயினும், இரு நாட்டு மக்களுக்கும் சில நாட்களாக இருந்த தலைவலி குறைந்தது. கடைசியில், இந்த போரினால் இஸ்ரேலை பற்றிய வெளியுலக கதாநாயக பிம்பம் சரிந்தது என்பதே உண்மை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 24, 2025 14:48

தங்களின் கருத்து தவறு.. என்றைக்கும் கதாநாயகன் இஸ்ரேல் தான்.. ஈரானை போன்று திடும் என்று போருக்கு வரவில்லை இஸ்ரேல் மாறாக ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கங்களை நையப்புடைத்து பிறகு தான் ஈரானை தாக்கியது.. ஈரானை போன்று நிலப்பரப்பிலும் எண்ணெய் வளத்திலும் கொழுத்த நாடு இல்லை இஸ்ரேல்.. தங்களின் தொழில்நுட்பத்தையும் ஆயுத உற்பத்தியையும் மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் நாடு.. இருப்பினும் சிறு நாடான இஸ்ரேல் தைரியத்துடன் போரிடுகிறது என்றால் பசிக்காக துரத்துகிற சிறுத்தையை விட உயிர் காத்துக்கொள்ள ஓடும் மானின் வேகம் அதிகமாக இருக்கும்.....எனவே இஸ்ரேல் என்றுமே உலகின் கதாநாயகனே.....!!!


duruvasar
ஜூன் 24, 2025 12:45

மூடர் கூட்ட மன்னா உலக அரசியல் தெரியாவிட்டால் கம்னு உட்கார்..


சேகர்
ஜூன் 24, 2025 13:57

இந்திரபிராஷ்த மன்னா, இன்னும் ஆபிரகாம் பிள்ளைகளில் யார் பக்கம் சார்ந்து பேச வேண்டும் என சொல்லவில்லையே. அதற்குள் ஏன் அவசரம்?


Ramesh Sargam
ஜூன் 24, 2025 12:01

போர் நிறுத்தம் என்றால் போரை முற்றிலும் இரு தரப்பினரும் நிறுத்தவேண்டும். பிறகு அமைதி பேச்சு வார்த்தையில் இறங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, இரவில் நிறுத்திவிட்டு, பகலில் மீண்டும் போர் செய்தால் அது போர் நிறுத்தம் என்று கருதப்படாது.


தஞ்சை மன்னர்
ஜூன் 24, 2025 11:43

இவ்வளவு பதட்டத்துக்கு காரணமான இசுரேலியனை ஆசியா நாடுகள் இணைந்து அடிக்கிற அடியில் இனி அமெரிக்கா ஆசியாவில் மூக்கை நுழைக்க பயப்படவேண்டும்


தஞ்சை மன்னர்
ஜூன் 24, 2025 11:19

எதற்க்காக போர் நிறுத்தம் இஸ்ரேல் என்ற தீவிரவாத அமெரிக்கா கண்டத்தின் அடியாள் நாடு ஆசியா கண்டத்தில் இருந்து முழுமையாக அழிக்கப்பட்டபின் அறிவிப்பு விடலாம் அடிக்கிற அடியில் அண்ணண் தம்பி உதவமாட்டான் என்கிற பழமொழி அமெரிக்கா இஸ்ரேல் நாட்டு க்கு பொருத்தி பார்க்கவேண்டும் உண்மை அதுதான் அமெரிக்கன் அவனது கொட்டத்தை அவன் கண்டத்தில் வைத்து கொள்ளட்டும் கண்டம் தாண்டி வந்து ஆசியாவிற்குள் படை பலத்தை நிறுத்துவது ஏன் என்ற கேள்வியினை ஏன் ஆசியா நாடுகள் எழுப்புவதில்லை


Thravisham
ஜூன் 24, 2025 11:30

இரான் வாரிசு முல்லா ஆட்சி ஒழிந்தாலே அங்கு மக்களுக்கு நிம்மதி. எந்த இஸ்லாமிய நாடும் முல்லா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, பாகிஸ்தான் தவிர.


தஞ்சை மன்னர்
ஜூன் 24, 2025 11:41

உங்க கூட்டத்தையெல்லாம் இசுரேலியனும் அமெரிக்கணும் ஒரு மனுஷனாவ மதிக்க மாட்டான் அதை முதலில் புரிந்து கொண்டு கருத்து போடு


nisar ahmad
ஜூன் 24, 2025 13:02

கரெக்டு எந்த முல்லா நாடும் ஆதரவூ தெரிவிக்கவில்லைதான் எல்லோரும் அமெரிக்கா என்கிற உலக தீவிரவாதியின் அடிமைகள் ஆனாலும் தனி சிங்கம் மாதிரி அடிச்சான்ல அமெரிக்காவ் இன்று ஈரான் கால்ல விழுந்து கெஞ்சி இனி என் வளர்பு பிள்ளை உண்ணிடம் வம்புக்கு வமாட்டான் போரை நிறுத்துன்னு ...


சேகர்
ஜூன் 24, 2025 13:53

23ஆம் புலிகேசி வடிவில் இருக்கும் தஞ்சை மன்னா, எடு அந்த வெள்ளைக்கொடியை. ஒரு கை பார்த்து விடுவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை