உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் - காசா போரில் சிக்கி 138 பத்திரிகையாளர்கள் பலி

இஸ்ரேல் - காசா போரில் சிக்கி 138 பத்திரிகையாளர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் பெடரேஷன் ( IFJ)தெரிவித்துள்ளது . இந்த சர்வதேச அமைப்பில் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா போர் துவங்கியது. ஓராண்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 128 பத்திரிகையாளர்கள், லெபனானை சேர்ந்த 5 பேர், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் , சிரியாவை சேர்ந்த ஒருவர் என 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலில் தான் அதிகம் பேர் பலியானதாக இந்த விவர அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் அமைப்பு, ஐ.நா., வரை கொண்டு சென்று இருக்கிறது. பலியான பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sudha
அக் 14, 2024 19:05

பொய் களையும் இன துவேஷத்தையும் பரப்ப ஆர்வமுள்ள அனைவரும் தண்டிக்க படுவார்கள்


Lion Drsekar
அக் 14, 2024 14:25

மன்னிக்கவும் போர்க்களத்தில் யாருமே முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் கொடுக்கவும் முடியாது எது உண்மை எது பொய் என்பதை அங்கு ஆராய்வதற்கு நேரமும் இருக்காது எல்லாமே ஒரு நொடியில் எடுக்கப்படும் நிகழ்வுகள் அவர்களின் ஒரே கொள்கை எதிரிகளைக் கொல்வது, ஆகவே அதை அறிந்து செய்லடுவது நல்லது, வந்தே மாதரம்


S.L.Narasimman
அக் 14, 2024 14:10

ஆடிகாற்றில் அம்மியே பறக்கும் போது தூசு எம்மாத்திரம்


Tiruchanur
அக் 14, 2024 13:23

இஸ்ரேல் சரியாய் ஓதை குடுக்கும்னு தெரிஞ்சும் அங்கே ஏன் போகணும், சாகணும்? துலுக்க பசங்க இருக்கிற இடத்துக்கு போகவே கூடாது. அது தற்கொலைக்கு ஸமம்


Jysenn
அக் 14, 2024 13:10

Part time job as journalists in AL Jazeera and full time job as terrorists in Gaza. This is their nature of work.


Ramesh Sargam
அக் 14, 2024 12:33

போர் நடக்கும் இடத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பல மைல் தூரத்திலிருந்து குண்டு வீசுபனுக்கு எப்படிதெரியும்? ஒட்டுமொத்தமாக ஒரு இலக்கை தேர்ந்தெடுத்து அவன் குண்டு போடுவான். பத்திரிகையாளர்கள் அதை மனதில் கொண்டு மிக மிக பத்திரமாக இருக்கவேண்டும். இறந்த பத்திரிகையார்களுக்கு என் அஞ்சலி.


சமீபத்திய செய்தி