உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவன தலைவர்!

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவன தலைவர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் நூலிழையில் உயிர் தப்பினார்.காஸா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில், தினமும் 10 ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.அப்போது, விமானத்தில் செல்வதற்காக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம், விமான நிலையத்திற்கு வந்து இருந்தார். தாக்குதலில் இருந்து, நூலிழையில், டெட்ராஸ் அதனோம் உயிர் தப்பினார். இவர் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, டெட்ராஸ் அதனோம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும். மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த கூடாது' என கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்ராஸ் அதனோம், 2017ல் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

jss
டிச 28, 2024 12:00

இது ஒரு டுபாக்கூர். சீனாவின் கொத்தடிமை. இஸரேல் குறி தவறி குண்டுகளைப் போட்டிருக்குறது.


Rasheel
டிச 27, 2024 16:29

தினமும் கலவரம், அப்பாவிகளை மத, இன காரணங்களுக்காக கொல்வது என்று இருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு இஸ்ரேல் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறான்


jayvee
டிச 27, 2024 15:17

சீன அடிமை தப்பித்துவிட்டான் ..எப்படி இவ்வளவு வருஷமாக இவன் இந்த பதவியில் உள்ளான் ?


visu
டிச 27, 2024 13:11

சர்வதேச சட்டத்தை ஹவுத்தி மதித்தனரா?அப்ப இவர் எது ஆட்சேபம் தெரிவித்தாரா ஒரு ஆண்டாக ஹௌதி இஸ்ரேலை தாக்கி வருகிறது


MUTHU
டிச 27, 2024 13:08

எப்பவும் தெளிவா செய்வ. இப்படி கோட்டை விட்டுட்டியே.


Anand
டிச 27, 2024 12:54

அடுத்த தடவை குறி தப்பாது...


Perumal Pillai
டிச 27, 2024 11:25

இது எல்லாம் ஒரு நியூஸ்?


Chandran,Ooty
டிச 27, 2024 13:15

ஊருக்கு ஒரு ஆள் போதும் என்கிறார்களே உண்மையா?


Nandakumar Naidu.
டிச 27, 2024 10:31

சர்வதேச சட்டத்தை ஹமாஸ், ஹவுத்தி, ஹேஜபுல்லாஹ், கத்தார், இரான், லெபனான் இவர்கள் எல்லாம் மதித்தனரா? கடைப்பிடித்தனரா? திராணி இருந்தால் அவர்களை கண்டியுங்க


TRUE INDIAN
டிச 27, 2024 09:52

The way they are doing now is catastrophic and we will have big issue soon.


Priyan Vadanad
டிச 27, 2024 09:35

வார்த்தைகளை ஏற்று கொள்கிறதா?