உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதல் காசாவில் 60 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதல் காசாவில் 60 பேர் பலி

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 22 குழந்தைகள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wlt5rh72&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மோதலை நிறுத்தும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டியதால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலில் இறங்கியது. காசாவின் ஜபாலியா பகுதியில் இருந்து வெளியேறும்படி பொதுமக்களை எச்சரித்த இஸ்ரேல் ராணுவம், அங்கு ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் ஏவுதளங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.இந்நிலையில், ஜபாலியாவில் இஸ்ரேல் படைகள் நேற்று அதிகாலை சரமாரியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டன. இதில், 22 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி