உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பள்ளி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: காசாவில் 39 பேர் பரிதாப பலி

பள்ளி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: காசாவில் 39 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பள்ளி மீது தாக்குதல்

இந்நிலையில், காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் கூட உறுதி செய்துள்ளது. பள்ளி வளாகத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கி இருந்த காரணத்தினால் தாக்குதல் நடத்தினோம் என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு அதைச் சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருவதாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் அல்-தவாப்தா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sivak
ஜூன் 07, 2024 21:29

வேறு வழியில்லை தீவிரவாதிகள் உற்பத்தி ஆகும் இடத்தை அழிக்கும் போது சில இழப்புக்கள் இருக்கத்தான் செய்யும்...,


தாமரை மலர்கிறது
ஜூன் 06, 2024 19:44

கத்தியை எடுத்தால் கத்தியால் தான் சாவு என்பதை போன்று தீவிரவாத்தை ஆதரித்தால், தீவிரவாத்தால் பாதிக்கப்பட நேரிடும்.


சுலைமான்
ஜூன் 06, 2024 17:50

தீவிரஸாதிகளை துடைத்து ஒழிக்கும் வரை இஸ்ரேலின் தாக்குதல் தொடரும்.


தமிழ்வேள்
ஜூன் 06, 2024 15:36

பொதுமக்களுக்கிடையே மறைந்து அரசு துருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பதில் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவதை தடுக்க இயலாது ... மதம் என்பதை தாண்டி , பயங்கரவாதிகளை பொதுமக்கள் ஏன் அரசு துருப்புகளை காட்டிக்கொடுக்க கூடாது ..பயங்கரவாதியை பாதுகாப்பதும் குற்றமே ...எனவே இஸ்ரேல் ஐ குறை சொல்வது தவறு ..... ஹமாஸ் ,ஹிஸ்புல்லா கும்பல் ஒழிக்கப்படும் பொது ஒரு சில இழப்புகளை தவிர்க்க இயலாது ....


Anand
ஜூன் 06, 2024 15:32

ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் உருவாகிக்கொண்டே இருக்காங்க


Kasimani Baskaran
ஜூன் 06, 2024 14:40

ஹமாஸின் கோழைத்தனத்தில் இஸ்ரேல் மீது வன்முறையை அவிழ்த்து விட்டு அதன் பலனை பொதுமக்கள் அனுபவிக்கிறார்கள் என்பது வெகு சோகமானது. தீவிரவாதிகளின் பிடியில் இருந்து பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடுவதுதான் இருக்கும் வழிகளில் சிறந்தது.


Tiruchanur
ஜூன் 06, 2024 14:32

00


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை