உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கைது நடவடிக்கையில் தப்பிக்க ரூட்டை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்

கைது நடவடிக்கையில் தப்பிக்க ரூட்டை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்:இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டபோது அவரது விமானம் வழக்கமான பாதையிலிருந்து விலகி, வேறு பாதையில் பயணித்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க, மேற்காசிய நாடான ​ இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு சென்றார். இனப்படுகொலை அப்போது, அவரது அதிகாரப்பூர்வ ஜெட் விமானமான 'விங்ஸ் ஆப் சீயோன்' ஐரோப்பிய வான்வெளியைத் தவிர்த்து வேறு பாதையில் சென்றது. பாலஸ்தீனத்தின் காசாவில் நடக்கும் போரில், இனப்படுகொலை நடப்பதாக இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. ஐ.சி . சி., எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு, நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகிய இருவருக்கும் கைது வாரண் ட் பிறப்பித்தது. காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள், நெதன்யாகு தங்கள் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்வோம் என்று பகிரங்கமாக கூறியுள்ளன. மாற்றுப் பாதை எனவே இந்த நாடுகள் மீது பறப்பதையும், விமானத்தை தரையிறங்க கட்டாயப்படுத்தக்கூடிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காகவும் மாற்றுப் பாதை தேர்ந் தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக, அமெரிக்காவிற்குச் செல்லும் இஸ்ரேலிய விமானங்கள் பிரான்ஸ் உட்பட மத்திய ஐரோப்பா வழியாக செல்லும். இந்தப் பாதையை தவிர்த்து, கூடுதலாக 600 கி.மீ., பயணித்து, நெதன்யாகு அமெரிக்கா சென்றடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !