உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவுக்கு வருகிறது காசா போர்: ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

முடிவுக்கு வருகிறது காசா போர்: ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ம் அக்.,7 ல் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 1,200 பேர் இறந்த நிலையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்க களத்தில் இஸ்ரேல் இறங்கியது. இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையிலானபோர் 15 மாதங்களாக நீடித்து வந்தது. 46 ஆயிரம் பேர் இறந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்ட வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வந்தன. இதன் பலனாக காசாவில் நீடித்து வந்த போரை நிறுத்துவதற்காக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஜன.,15 ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ஆறு வார காலம் போரை நிறுத்துவது, பிணைக்கைதிகளை பரிமாறிக் கொள்வது அடங்கும்.இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்புக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நோக்கங்களை கருத்தில் கொண்டும், போருக்கான காரணம் நிறைவேறியதாலும், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இஸ்ரேல் அரசின் முழு அமைச்சரவை நாளை கூடி இறுதி முடிவெடுக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MUTHU
ஜன 18, 2025 08:45

அமெரிக்கா இஸ்ரேலுக்கு பிச்சை போட்டதா. இல்லை காசாவிற்கு பிச்சை போட்டதா. இஸ்ரேல் மனது படி ஒரு மனிதாபிமான உதவி வாகனம் கூட காசாவிற்கு உள்ளே சென்றிருக்க முடியாது ஆனால் தினமும் நூறு முதல் நூற்றைம்பது வாகனங்கள் உணவு பொருட்களுடன் உள்ளே சென்றிருக்கின்றன. அனைத்தும் அமெரிக்காவின் வழிகாட்டுதல் படியே சென்றுள்ளன.


கிஜன்
ஜன 17, 2025 22:09

தேவையற்ற அப்பாவி மக்களின் நிம்மதியை கெடுத்த போர் ... முடிவுக்கு வருவதில் மகிழ்ச்சி ....


Ganapathy
ஜன 17, 2025 21:31

1947 தொடங்கி இன்றுவரை 999999999 தடவையாக காசா போர் முடிவுக்கு வருகிறது. ரொம்பசந்தோஷப்பட வேண்டாம்.


Edwin Jebaraj T, Tenkasi
ஜன 17, 2025 21:09

பிணைக்கைதிகளை விடுவிப்பது மட்டுமே இஸ்ரேலின் ஒரு அம்ச கோரிக்கை. இதற்கு இது நாள் வரை சம்மதிக்காத ஹமாஸ் 46,000 உயிர்களும் போய், வாழவே தகுதியில்லாத நகரங்களான பிறகு சம்மதம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது .இதற்கு எதற்கு இத்தனை பிடிவாதம் இனி வாழ்நாளில் போரைப் பற்றி ஹமாஸ் கனவிலும் நினைக்க மாட்டார்கள். இனியாவது ஒற்றுமையாக அமைதியாக வாழ வேண்டுவோம்.


nisar ahmad
ஜன 18, 2025 02:15

எப்படி இஸ்ரேலுக்கு அடிமையாகவா? இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் வேண்டுமென்று போராடினீர்கள் அடிமையாக சந்தோஷமாக வாழ வேண்டியது தானே.


மதுரை வாசு
ஜன 18, 2025 08:56

சுதந்திர நாடாக பாலஸ்தீனத்தை உருவாக்கிய பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கே கட்டுப்படாமல் காசாவை மட்டும் தனிப்பிரதேசமாக பாலஸ்தீன நாட்டின் சட்டங்கள் காசாவில் செல்லாது ஆண்டுகொண்டு வந்த பயங்கரவாதிகளான ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படவேண்டும். அவர்கள் மீண்டும் எழவே இந்த 6வார கால போர் நிறுத்தம் உதவும். பிணைய கைதிகளை மீட்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்திற்க்காகவே இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த அமைதி நிலைக்காது. ஈரானும், ஹமாஸும் இருக்கவும் விடமாட்டார்கள். இஸ்ரேலுடன் இதுவரை நடந்த போர்களில் தோற்று அடங்கிப்போய் இருக்கும் அரபு நாடுகள் "பட்டவரைக்கும் போதும், நமக்கு எதுக்கு வீண்வம்பு" என்கிற நிலையில்தான் தொடர்ந்து இருக்கும். ஆனால்.மூர்க்கர்கள் மட்டுமே ஹமாஸுக்கு முட்டுகொடுத்துக்கொண்டே இருப்பார்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 17, 2025 21:05

காசா முணை மறுபடியும் மீண்டு எழ குறைந்தது ஐம்பதாண்டு காலம் தேவை என்று வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்....படிப்படியாக அவர்கள் மீண்டு வரும்பொழுது மீண்டும் ஹமாஸ் மற்ற இஸ்லாமிய நாடுகளின் சூழ்ச்சியில் சிக்கி வாலை ஆட்டினால் காசா முணை முற்றிலும் அழிவது உறுதி....1500 இஸ்ரேலியர்களை கொன்றதால் இழந்தது 46000 பாலிஸ்தீனியர்களை.... மக்களுக்காகத்தான் போராட்டம் அந்த மக்களை அழித்து யாருக்காக போராட போகிறீர்கள்....யதார்த்த நிலையை உணர்ந்து மக்களை காப்பது நல்லது...!!!


nisar ahmad
ஜன 18, 2025 02:26

இஸ்ரேல் தன் இழப்புகளை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை பத்திரிக்கை டி வி என்று அனைத்தையும் வெளியேற்றியது எதற்காக தன் இழப்புகளை மற்றவர்கள் அறியகூடாதென்றுதான்.இந்தப்போரில் இஸ்ரேலின் இழப்பு மிகப்பெறியது 15 மாதங்கள் போராடியும் அதன் இழக்கை அடைய முடீவில்லை பினைக்கைதிகளைகூட மீட்க முடியாமல்தான் போர்நிறுத்தம் என்ற போர்வையில் சரனடைந்துள்ளது.அது பத்தாயிரத்துக்கூம் மேற்பட்ட போர்வீரர்களை இழந்துள்ளது.அமெரிக்கா பிச்சைப்போடாவிட்டால் ஒரு மாதம் கூட அதனால் தாக்குப்பிடித்திருக்க முடியாது.ஹமாஸை ஒழித்து விட்டுதான் போர் நிற்கும் என்றவர்கள் அதனிடமே போர் நிறுத்த ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால் இஸ்ரேல் தோற்றதற்கு சமம்.இஸ்ரேல் விடுதலை போரிட்ட வீரர்களை கொல்ல வில்லை அப்பாவி மக்களையும் அவர்களின் சொத்தையூம்தான் அழித்தார்கள்.சுதந்திர போராட்ம் எங்கும் தோற்றதாக வரலாறு இல்லை.


Ramesh Sargam
ஜன 17, 2025 20:38

பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளிலும் உள்ள மக்கள் இனியாவது நிம்மதியாக வாழவேண்டும் கடவுளே.


Karthik
ஜன 18, 2025 12:17

Sure .. But Just 6 months only..


சமீபத்திய செய்தி