உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் பலி

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ல் திடீர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது.ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது.இதன்படி, இஸ்ரேல் ராணுவம் காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழி தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. காசா நகரில், 3,000 ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். எனவே ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், காசாவின் வடக்குப்பகுதியில் குடியிருப்புகள், நிவாரண முகாமகள், அகதிகளுக்கான டென்ட்கள் மற்றும் மக்களை ஏற்றிச் சென்ற லாரிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்த தாக்குதலில் 76 பேர் கொல்லப்பட்டனர்.அதற்கு முன்னர், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் டாக்டராக பணியாற்றிய முகமது அபு சல்மியா என்பவரது வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் தாக்குதல் நடத்த துவங்கியது முதல், இதுவரை சுகாதார பணியாளர்கள் 1700 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 400 பேரை சிறைபிடித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.காசாவில் இருந்து உயிருக்கு பயந்து நகரை விட்டு வெளியேறி சென்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து காசாவை விட்டு வெளியேறியவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மின்சாரம், குடிநீர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் டென்ட் அமைத்து தங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேலில் ஆர்ப்பாட்டம்

இதனிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அந்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போரை நிறுத்திவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நெருக்கடி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிட்டுக்குருவி
செப் 21, 2025 21:01

இத்தனை காஸாவின் துயங்களுக்கும் ஹமாஸ் தீவிரவாதம் தான் காரணம் என்பது சமீபத்தில் கூடிய இஸ்லாமிய நாடுகளுக்கு புரியாதது ஏன் என்று புரியவில்லை .குறைந்தபட்சம் எஞ்சி இருக்கும் கடத்தப்பட்டு வைத்துள்ள இசுரேலியர்களை விடுதலை செய்யவாவது குரல் கொடுத்திருக்கலாமே .அவர்கள் போக்கு தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது .குறைந்தபட்சம் தீவிரவாதத்தை எதிர்த்து குரல்கொடுத்து ,கடத்தப்பட்டவர்களை விடுவித்து ,பாலஸ்தீனியம் நாடாக அங்கீகரிக்கவேண்டும் என்ற குரல் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமானதாக இருந்திருக்கும் .


Nagarajan D
செப் 21, 2025 19:40

காசா முழுவதும் தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். காசா தரைமட்டமாக்கப்படவேண்டும்


Perumal Pillai
செப் 21, 2025 18:26

குட் நியூஸ்.


Vijay D Ratnam
செப் 21, 2025 16:10

பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இனி இல்லை. முடிந்துவிட்டது. காஸா இருந்த இடத்தில் இனி இஸ்ரேலின் பெரிய துறைமுக நகரம், அதை ஒட்டி சர்வதேச தரத்தில் ஒரு கப்பற்படை தளம் உருவாக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சென்ற வாரம் அறிவித்துவிட்டார். பாலஸ்தீனத்தை அழித்து அங்கிருந்த இஸ்லாமியர்களை அகதிகளாக்கி, ஒரு துண்டு ரொட்டிக்கு வழியில்லாத பிச்சைக்காரர்களாக்கி, நோயாளிகளாக்கி, அண்டை நாட்டுக்கு ஓடவைத்த பெருமை ஹமாஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகளை மட்டுமே சாரும். அடுத்து லெபனானை பறிகொடுக்க போகிறார்கள்.


KOVAIKARAN
செப் 21, 2025 16:05

விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதைதான் அங்கே நடக்கிறது. யப்பா, ஹமாஸ் - இஸ்ரேல் தலைவர்களே, இரண்டு பேரும் ஆயுதப் போரை விடுத்து, உட்கார்ந்து பேசி ஒரு நல்ல முடிவெடுத்து, யுத்தத்தை, முடித்துவைத்து, சமரசம் ஆகி, உங்கள் பகுதியில் அமைதியை விரைவில் கொண்டு வாருங்கலப்பா. தினமலரில் தினமும் உங்களைப்பற்றிய செய்தி வரும்போது மனசெல்லாம் வலிக்கிறது.


Thravisham
செப் 21, 2025 17:22

அண்ணே தூங்கும் சிங்கத்தை கிளப்பிவிட்டது கேவலமான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு. அந்த போரை அதாவது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை துவைக்க வேண்டியது இஸ்ரேல். இஸ்ரேல் கடவுளின் தேசம்


Indian
செப் 21, 2025 15:48

பிணைக்கைதிகளை விடுவிக்க சவுதி UAE கத்தார் குவைத் போன்ற அரபு நாடுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை


புதிய வீடியோ