வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நெதன்யாகு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.. அப்பாவி உயிர்கள் பாவம்
மேலும் செய்திகள்
அமெரிக்கா சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேற பணம்
1 hour(s) ago
இந்தியாவுக்கு சலுகை வழங்க நியூசிலாந்தில் எதிர்ப்பு
4 hour(s) ago | 1
ஏமன்: ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 'எங்களுக்கு தீங்கு செய்ய முயல்பவர்கள் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.நெதன்யாகு சொல்வது என்ன?
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது: இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எங்களுக்கு தீங்கு செய்ய முயல்பவர்கள் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும். ஹவுதி பயங்கரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கவும், அரபு நாடுகளைத் தாக்கவும் ஈரான் ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறியதாவது: இஸ்ரேல் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடிகளும் தொடரும் என தெரிவித்தார்.
நெதன்யாகு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.. அப்பாவி உயிர்கள் பாவம்
1 hour(s) ago
4 hour(s) ago | 1