உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைகள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!

வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைகள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில்முகமது யூனுஸ் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த கடந்த ஆண்டு போராட்டங்களை இந்தியா விரும்பவில்லை. இதனால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உறவுகள் விரிசல் அடைந்துள்ளது. மாணவர்கள் செய்தது இந்தியாவுக்குப் பிடிக்காததால் தற்போது எங்களுக்கு அவர்களுடன் பிரச்னைகள் உள்ளன.முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது. பிரச்னைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனாவை இந்தியா வரவேற்கிறது. ஹசீனாவின் அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை மோசமாக்கியுள்ளன. இவ்வாறு முகமது யூனுஸ் பேசினார்.வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் ஹசீனா மற்றும் பிற அவாமி லீக் தலைவர்களுக்கு எதிராக ஏராளமான குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளையில், வங்கதேச சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, பல்வேறு சித்ரவதைகள் செய்து மக்களை கொன்ற பின்னணி கொண்ட பாகிஸ்தானுடன் முகமது யூனுாஸ் நட்புறவு பாராட்ட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
செப் 25, 2025 21:20

நீயெல்லாம் எதுக்கு உயிரோடு இருக்கிறாய் முகம்மதுவே


வாய்மையே வெல்லும்
செப் 25, 2025 20:30

வங்காளதேசத்தில் ஒரு கருப்பு மைய்ய புள்ளியே இந்த வெத்துவேட்டு முஹம்மது யூனிஸ் என்கிற குள்ளநரிக்கூட்ட தலைவன். இவரை இயக்குபவர்கள் எல்லாம் வங்கதேச எதிர்ப்பாளர்கள். அங்கு அமைதியே வரக்கூடாது என நினைப்பவர்கள் கூட்டம் . இவரு பெரிய அப்பா டக்கர் நல்லவர் மாதிரி வெளிவேஷம் போடுறாரு .


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 20:08

ஷேக் ஹசினா அறிக்கைகள் எதுவும் வெளியிடுவதில்லை.அவர் அரசியல் அடைக்கலம் கேட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ள கௌரவமான கைதிதான். இது இரண்டு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம். ஐநா சபையில் பேசும் விஷயமல்ல. அதுவும் யூனூஸ் ஒரு தற்காலிக தலைவர். இந்த விஷயத்தை பேசும் தகுதி அடுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. இவர் ஐநாவில் பேசுவதன் பின்னணியில் பாக், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிரிகளையும், அமெரிக்காவையும் ஒன்றுசேர வைத்துள்ளது. இந்தியா 'வில்' மேனேஜ்.


S.VENKATESAN
செப் 25, 2025 20:03

இவரே ஒரு இத்துப்போனவர். அமெரிக்கா சொல்வதை செய்யும் இவருக்கு ஒரு ஆப்பு உண்டு


j.jayakanthan kanthan
செப் 25, 2025 19:25

கிரேட் போர்