உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் பதவியேற்பில் ஜெய்சங்கருக்கு முதல் வரிசை முதல் சீட்!

டிரம்ப் பதவியேற்பில் ஜெய்சங்கருக்கு முதல் வரிசை முதல் சீட்!

வாஷிங்டன்; டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாகை சூடிய டொனால்டு டிரம்ப், அதிகாரப்பூர்வமாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் ஒன் உள் அரங்கத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு (ஜன.20) 10.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=thfrs86w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான வரவேற்பும், உபசரிப்பும் அளிக்கப்பட்டது. பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில், முதல் இருக்கை அளிக்கப்பட்டது. அவருக்கு அருகில் ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோ அமர்ந்திருந்தார். 2 வரிசைகள் பின்தள்ளி ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டகேஷி ஐவாயா, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோருக்கு இடம் தருவிக்கப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A.Gomathinayagam
ஜன 21, 2025 14:11

இது தனி மனிதருக்கான மரியாதை இல்லை. இந்தியா என்ற வல்லரசுக்கு கொடுக்கும் மரியாதை


Ganesh
ஜன 21, 2025 12:25

மகிழ்ச்சி


Ramesh Sargam
ஜன 21, 2025 11:21

டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவுக்கு, குறிப்பாக இந்திய பிரதமர் மோடிஜிக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. இதே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பே வந்திருக்காது.


SANKAR
ஜன 21, 2025 12:39

please read list of invitees during congress rule


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை