உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் ஜப்பானின் முயற்சி தோல்வி

நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் ஜப்பானின் முயற்சி தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பானின் தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் தரையிறக்கும் முயற்சியின் போது தொடர்பை இழந்தது. இதனால், இந்த திட்டம் தோல்வியடைந்ததாக கருதப்படுகிறது. ஜப்பானின் தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ், நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆளில்லா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.சுற்றுப்பாதையில் இருந்து ரெஸிலியன்ஸ் விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் பணியை ஐஸ்பேஸ் விஞ்ஞானிகள் இன்று அதிகாலை மேற்கொண்டனர். தரையிறக்கும் பணியின் கடைசி கட்டத்தில் விண்கலம் தொடர்பை இழந்தது. இது ஐஸ்பேஸ் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக நேரலை நிறுத்தப்பட்ட நிலையில், விண்கலத்தின் விபரம் பற்றி ஐஸ்பேஸ் நிறுவனம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததாக கருதப்படுகிறது.விரைவில் இது குறித்து ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐஸ்பேஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
ஜூன் 06, 2025 11:26

எங்கடா இந்தியா முதல் முறையாக தோல்வி அடைந்த போது நம் நாட்டை ஏளனம் செய்து பேசிய you tubers அடுத்த முறை வெற்றி பெற்ற பிறகும் இதெல்லாம் பெரிய சாதனை யா என்று ஏளனம் செய்த இந்த நாட்டின் சோறு தின்றது, முன்னேறிய ஜப்பான் ஏ திணறுகிறது. எனவே நாட்டின் வளர்ச்சிக்கு positive ஆக சிந்தித்து அனைவரும் முயற்சி செய்தால் இந்தியா விரைவில் புதிய உச்சத்தை தொடும். எனினும் ஜப்பானின் முயற்சி க்கு வாழ்த்துக்கள்


Padmasridharan
ஜூன் 06, 2025 08:57

ஒரு நாடு விட்டத மற்றவர்கள் உபயோகித்து இதற்கு உபயோகப்படுத்தும் பணத்த அந்த நாட்டு மக்களுக்கு வேறு நல்லதுக்கு பயன்படுத்தலாம் சாமி .


Thravisham
ஜூன் 06, 2025 10:32

இதில் பற்பல உளவு பிரச்சனை உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை