உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிஸ்க்கு பிடித்தமான மசால் தோசை!

கமலா ஹாரிஸ்க்கு பிடித்தமான மசால் தோசை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், காலை உணவாக இட்லி மற்றும் தோகை வகைகளை விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்; 19வது வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.தனது தாயார் குறித்து கமலா ஹாரீஸ் கூறும்போது, எனது தாயார் தைரியமானவர். பெண்களின் நலனுக்காக போராடினார். அநீதி பற்றி புகார் கூறாதே. அதற்குஎதாவது செய்ய வேண்டும் என முயற்சி செய் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார் என பெருமையுடன் எப்போதும் கூறுவார்.இந்தியா கலாசாரம் மீது பற்றுக் கொண்ட ஷியாமாளா காலை எப்போதும் தோசை மற்றும் இட்லியை விரும்பி சாப்பிடுவார். இதனையே, தனது குழந்தைகளுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார். இட்லியின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் எங்களை தாயார் இந்தியா அழைத்து செல்வார் என்கிறார் கமலா ஹாரிஸ். இதனால், இட்லி, தோசை ஆகிய இந்திய உணவு வகைகள் மிகவும் பிடித்து போனதாக கூறுகிறார் கமலா ஹாரிஸ். இது குறித்த வீடியோவும் அப்போது வைரலானது. அப்போது கமலா ஹாரீசும், இந்த வீடியோவை எடுத்தவரும் இணைந்து மசாலா தோசை தயார் செய்து சுவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S. Gopalakrishnan
செப் 21, 2024 19:11

இவர் அப்பா நீக்ரோ. அம்மா அமெரிக்கர் - இந்திய வம்சாவளி என்பது வேறு விஷயம். இவரை நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்று எனக்கு புரியவில்லை.


RAMAKRISHNAN NATESAN
செப் 21, 2024 14:17

இந்தியா போனால் தோசை சுட்டு எடுத்துக்கிட்டு தருவாங்க.....


Barakat Ali
செப் 21, 2024 16:16

அம்மணிக்கு போர்க் அல்லது பீப் விருப்பமாக இருக்க வாய்ப்பு ........ ஆனா இந்திய வம்சாவளிக்கிட்டே உண்மையை ஒத்துக்கிட்டா தூன்னுடுவாங்க .....


புதிய வீடியோ