வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த உண்மை உலகின் எந்த மூலையில் உள்ள மனிதனுக்கும் தெரியுமே ????
வாஷிங்டன்: சமூக வலைதளங்கள், தங்கள் பயனர்களை கண்காணித்து அவர்கள் கண்டது, கேட்டது, விரும்பியது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விற்று காசு பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி ஆரம்பம் முதல் இரவு முடியும் வரை அதில் ஏராளமானோர் மூழ்கி உள்ளனர். ரீல்ஸ் பதிவிடுவது, பார்ப்பது, வீடியோக்கள் பார்ப்பது, கருத்துகளை பரிமாறுவது என பல கோடிக்கணக்கானோர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் மெட்டா, யூடியூப், டிக்டாக் வலைதளங்கள் மற்றும் அதன் தகவல்களை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெரும்பாலான சமூக வலைதள நிறுவனங்கள் பயனர்களை கண்காணிக்கின்றன. அதில் சிறுவர்களும் அடங்குவர். முக்கியமாக இலவச சேவை வழங்கும் நிறுவனங்கள் பயனர்களின் தகவல்களை எடுத்து,விளம்பர நிறுவனங்களுக்கு விற்று வருமானம் பார்க்கின்றன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பதில் அந்த நிறுவனங்கள் தவறிவிட்டன. இவ்வாறு பயனர்களை சமூக வலைதள நிறுவனங்கள் கண்காணிப்பதால், மக்களின் தனியுரிமைக்கும், அவர்களின் சுதந்திரத்திற்கும் சிக்கல் உள்ளது. அவர்களின் அடையாளம் திருடப்படுவதுடன், பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த உண்மை உலகின் எந்த மூலையில் உள்ள மனிதனுக்கும் தெரியுமே ????