உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முஸ்லிம்கள், தமிழர்களை துாண்டிவிடும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங்

முஸ்லிம்கள், தமிழர்களை துாண்டிவிடும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங்

புதுடில்லி : தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும்படி, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மணிப்பூர் கிறிஸ்துவர்களை காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுான் துாண்டிவிடுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு அமைக்கும்படி பல்வேறு தீவிரவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இவர்களை ஒழிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதால் இந்த அமைப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.

நடவடிக்கை

அங்கு இவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற தீவிரவாத அமைப்பை நிறுவியவர் குர்பத்வந்த் சிங் பன்னுான். இவரை தேடப்படும் தீவிரவாதியாக மத்திய அரசு 2020ல் அறிவித்தது.இந்நிலையில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' அமைப்புக்கும், அதன் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுானுக்கும் இந்தியா விதித்துள்ள தடை உத்தரவை நீடிப்பது தொடர்பான பரிசீலனையை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் மேற்கொண்டது.இதற்காக, புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கி, பன்னுான் மற்றும் அவரது அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பின் குறிப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த பின் குறிப்பின் அடிப்படையில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குறிப்பு விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த குறிப்பில் பல்வேறு பகீர் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதன் விபரம்:

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான, 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.பிற சமூகங்களுக்கு எதிராக சிறுபான்மை சமூகங்களைத் துாண்டி, மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதன் வாயிலாக, இந்தியாவுக்கு எதிரான தங்கள் செயல்பாட்டை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

பாக்., ஆதரவு

இதன் ஒரு பகுதியாக, மணிப்பூரில் வாழும் கிறிஸ்துவர்களை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்த துாண்டுகின்றனர்.திராவிடம் என்ற கோரிக்கை வாயிலாக தமிழகத்தை பிரிக்கவும், முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குரல் எழுப்பி, அவர்களை துாண்டிவிட்டு, 'உருதுயிஸ்தான்' என்ற தனி நாடு கோரிக்கையை வலுப்பெறச் செய்ய சதி செய்கின்றனர்.இவர்களின் பிரிவினைவாத செயல்களுக்கு தலித் மக்களின் மனதை மாற்றி ஆதரவு கோரும் பணிகளும் நடக்கின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை அரசுக்கு எதிராக போராட துாண்டியதிலும் பன்னுான் அமைப்பினருக்கு பங்குள்ளது.இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க வன்முறையை துாண்டுவதே, 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' அமைப்பின் நோக்கம். ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் உள்ள சீக்கியர்களை மூளைச் சலவை செய்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சி நடக்கிறது. சர்வதேச அளவிலான கேங்ஸ்டர்கள், பயங்கரவாதிகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பன்னுானுக்கு தொடர்பு உள்ளது. சமீபமாக, பாகிஸ்தான் ஆதரவும் அவர்களுக்கு கிடைத்து உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NACHI
பிப் 01, 2025 19:04

போட்டி பொறாமை...இவனை அவர்கள் ஆளே போடபோறாங்க.....


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 01, 2025 11:47

திமுக இதற்கு முழு ஆதரவு தரும். பிரதமர் ராஜீவ் உலகின் முதல் மனித வெடி குண்டு மூலம் கொன்றவர்களை வெளியே கொண்டு வந்த வேகத்தை பார்த்தாலே தெரியவில்லையா. இலங்கை வடபகுதி தமிழகம் மற்றும் கேரளா இலட்சத்தீவு இவைகளை உள்ளடக்கி தமிழ் தேசம் திராவிட நாடு என்று தீவிர வாத இயக்கம் விடுதலை புலிகளுடன் இணைந்து அப்போதே திட்டம் தீட்டயது அணைவரும் அறிந்தது தானே. இதற்காக தானே திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு கனிம வளங்கள் எல்லாம் கேரளாவிற்கு கொடுத்து விட்டு கேர்ள் மருத்துவ கழிவுகளை பண்டமாற்று வியாபாரம் செய்பவர்கள் திராவிட கட்சிகள்.


raja
பிப் 01, 2025 11:00

இவன் என்ன தூண்டிவிடுவது முன்பே பிரிவினை வாதம் ஆரம்பித்துவிட்டது, திராவிடம் என்று பேச ஆரம்பித்தார்களோ அன்றே துவங்கிவிட்டது


Anand
பிப் 01, 2025 10:57

இந்த பண்ணுன் கதை கூடிய சீக்கிரம் முடியப்போகிறது......


veeramani
பிப் 01, 2025 10:24

1947இந்திய விடுதலை பெட்ரா சிறப்பான வருடம் ஆனால் அன்று முதல் இந்திய அரசிற்கு தலை வழியும் திருகுவலியும் ஆரம்பித்துள்ளது . பஞ்சாபி பிரிவினை, மிகப்பெரிய இருதயத்தின் ரத்தம் . இந்திய மக்களின் தளி போன்ற இடமான பஞ் சாபின் சிக்கிய மக்காள் சுதந்திரத்திற்கு செய்த பிரியங்கா பலப்பல. சீக்கியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் எழுதமுடியாது ஆனாலும் ஒரு சில சீக்கியர்கள் இன்னு இந்தியாவை துண்டாட நினைக்கிறார்கள். இவர்கள் இந்திய மக்கள் இல்லை மேலும் பாகிர்ஸ்தான் பஞ்சாபின் சீக்கியர்கள் . இந்தியாவை எவர் எண்ணினாலும் துண்டாட முடியாது . இவர்களை வேறோதோடு அறுத்தல் வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2025 10:12

தீவிரவாத மூளைச்சலவைக்கு யார் ஈஸியா ஆளாவாங்க ன்னு அவனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு ......


premprakash
பிப் 01, 2025 09:11

இவனுக்கு பண பலம் மற்றும் ஆயுத பலம் எங்கிருந்து வருகிறது.... அமெரிக்கா.


N.Purushothaman
பிப் 01, 2025 08:19

இவனை நாடு கடத்த அமெரிக்காவிடம் இந்தியா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் .... அமெரிக்காவில் இவனை வளரவிட்டால் குருத்வாராக்களிலேயே இவன் பயங்கரவாத சதி திட்டத்தை தீட்ட ஆரம்பித்துவிடுவான் ...


V வைகுண்டேஸ்வரன், chennai
பிப் 01, 2025 08:07

இஸ்ரேல் பாணி ட்ரீட்மெண்ட் குடுத்தா அடுத்த கை கூலிகள் திருந்துங்க


naranam
பிப் 01, 2025 07:59

இவனை ஒழிக்கும் நாள் எந்நாளோ!


முக்கிய வீடியோ