உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்றடைந்தார் கிம் ஜோங் உன்

குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்றடைந்தார் கிம் ஜோங் உன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், குண்டு துளைக்காத ரயில் மூலம் அந்நாட்டுக்கு சென்றடைந்தார். அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபராக 2011ம் ஆண்டு முதல் கிம்ஜாங் உன் உள்ளார். சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பை மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுத்து வருகிறார். பல ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்தாலும், சீனா, ரஷ்யா தவிர வேறு நாடுகளுக்கு இவர் சென்றதில்லை. 2018 -19ம் ஆண்டு சீனாவுக்கு ரயில் மூலம் சென்றார். 2023ம் ஆண்டு ரஷ்யா பயணம் மேற்கொண்டு, அதிபர் புடினை சந்தித்து பேசினார். இந்த இரு நாடுகளுக்கும் ரயில் மூலம் செல்வதே தனக்கு பாதுகாப்பு என்று அவர் கருதுகிறார். நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட குண்டு துளைக்காத ரயில் மூலம் சீனா சென்றடைந்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை வீழ்த்தியதன் 80ம் ஆண்டையொட்டி சீனா பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கிம்ஜோங்உன் பங்கேற்கிறார். ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
செப் 03, 2025 03:59

அவரையும் SCO மாநாட்டிற்கு அழைத்து பெருமை சேர்த்திருக்கலாமே... பாகிஸ்தானுக்கு கம்பெனி கிடைச்சிருக்குமே


Ramesh Sargam
செப் 03, 2025 01:26

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தன்னுடைய நாட்டில் அணுஆயுதங்களை தயாரித்து வைத்துக்கொண்டு, உலகநாடுகளையே மிரட்டிக்கொண்டு இருப்பான். இருந்தாலும் பயம், தான் பயணம் செய்யும் ரயில் குண்டு துளைக்காத ரயில். ஏன் இந்த பயம்?


Oviya Vijay
செப் 02, 2025 23:42

செய்தியில் தவறு உள்ளது... பல ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தாலும், சீனா, ரஷ்யா தவிர வேறு நாடுகளுக்கு இவர் சென்றதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. ஏனெனில் இவர் தற்போதைய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே ஒருமுறை அதிபராக பதவி வகித்த காலத்தில் அவரை சிங்கப்பூர் சென்று சந்தித்திருக்கிறார்... அப்போதும் குண்டு துளைக்காத ரயிலில் வட கொரிய அதிபர் பயணம் மேற்கொண்டார் என்பது உலகளாவிய பேச்சாக இருந்தது...


anonymous
செப் 02, 2025 21:57

இவர் இறந்துவிட்டார் என்று மேலை நாட்டு பத்திரிககைகள் சில வருடங்கள் முன்பு செய்தி வெளிட்டனவே


Palanisamy T
செப் 02, 2025 20:36

பெய்ஜிங் நகரில் நடந்த மாநாட்டில் சீனா ரசியா இந்தியாவோடு சேர்ந்து இப்போது வடகொரியாவும் கலந்துக் கொண்டுள்ளது. அப்படியென்றால் இந்தியா வடகொரியாவும் மிக நெருங்கிய நட்பு நாடாக மாறிவிட்டார்களா? கேட்பதற்கு நல்லாதானிருக்கு. இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட மற்ற மூன்று நாடுகளும் மனித உரிமைக்கு அவ்வளவு மரியாதைக் கொடுக்கும் நாடுகள். கலந்து கொண்ட இந்த மூன்று நாட்டு தலைவர்களும் மோசமான சர்வாதிகாரிகள் . வாழ்க வளருக உங்கள் உறவுகள். மேலும் வளரட்டும்.


Thravisham
செப் 02, 2025 20:53

மனித உரிமை பற்றி மிருக புத்தி கொண்டவர்கள் பேசக் கூடாது


முக்கிய வீடியோ