உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் மன்னர் சார்லஸ் கேன்சர் சிகிச்சையில் முன்னேற்றம் : அரண்மனை மகிழ்ச்சி

பிரிட்டன் மன்னர் சார்லஸ் கேன்சர் சிகிச்சையில் முன்னேற்றம் : அரண்மனை மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லசுக்கு அளித்த கேன்சர் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரண்மனை வட்டார செய்தி தெரிவிக்கிறது.பிரிட்டன் மன்னர் சார்லசுக்கு கடந்த பிப்ரவரியில் உடல்நலக்குறைவு காரணமாக நடந்த சோதனையில் அவருக்கு சிறுநீர் குழாய் பாதையில் பிராஸ்டேட் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல் நலன் மோசமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக தவறான தகவல் பரவியது. இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வட்டாரம் மறுத்துள்ளது.

டாக்டர்களுக்கு நன்றி

நமது டாக்டர்களின் அற்புதமான சிகிச்சையால் மன்னர் சார்லஸ் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் மக்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்தால் டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரண்மனை செய்தி தொடர்பாளர் டாக்டர்கள் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 10 ம் தேதி அரசி கமீலாவுடன் 19 வது திருமண நாளை முன்னிட்டு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.மேலும் முதல் நிகழ்ச்சியாக கேன்சர் மையத்திற்கு சென்று அங்குள்ள மருத்துவ ஊழியர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தொடர்ந்து மன்னர் சார்லஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார் . மேலும் ஜூன் மாதம் ஜப்பான் மன்னர் பிரிட்டன் வரவுள்ளார். இவரை சந்தித்து அவருக்கு மன்னர் சார்லஸ் விருந்தளிப்பார் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
ஏப் 28, 2024 11:14

வாழ்த்துக்கள் அதற்குள் நம்மவர்கள் எல்லா ஏற்படுகளையும் அரண்மனை செய்து கொண்டு இருக்கிறது என்று வீடியோவை போட்டு நம் எல்லோரையும் நம்பவும் வைத்து அதை உண்மை என்று நம்பி எல்லோருக்கும் வேறு அந்த செய்தியை அனுப்பி தற்போது செய்வது அறியாமல் விழிக்கிறோம் இனி தினமலரில் வரும் செய்தியை மட்டுமே பகிர்ந்து கொள்வது என முடிவுக்கு வந்துவிட்டேன் நன்றி வந்தே மாதரம்


அப்புசாமி
ஏப் 27, 2024 20:34

டவுட்டுதான்...


குமரி குருவி
ஏப் 27, 2024 19:48

டயானா கணவரா..


கட்டத்தேவன், திருச்சுழி
ஏப் 27, 2024 16:04

இந்தியாவிடம் இருந்து கொள்ளையடித்த கோஹிணூர் வைரம் உங்கள் நாட்டில் இருப்பது வரை இப்படித்தான் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கொடுமையான தீராத வியாதிகள் உங்கள் குடும்பத்தை பீடித்து ஆட்டிக் கொண்டே இருக்கும். எங்கள் இந்திய மக்களை கொஞ்ச நஞ்ச பேரையாடா கொன்று இருக்கிறீர்கள் அந்த பாவத்தை எல்லாம் உங்களின் அரச குடும்பம் ஆண் வாரிசுகள் உள்ள வரை அனுபவித்தே தீர வேண்டும் என்பதுதான் உங்களுக்கு தலையில் எழுதப்பட்ட விதியாகும்.


மேலும் செய்திகள்