உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குவைத்தின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

குவைத்தின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத் சிட்டி: குவைத் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் ' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. மேற்கு ஆசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்று குவைத் சிட்டியில் நடந்த 'ஹாலா மோடி' என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=davh5zcf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று குவைத் அரண்மணையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் விவாதித்தார்.இந்நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ' ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' விருது வழங்கி அந்நாடு கவுரவித்தது. நட்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்த விருதானது அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி இதுவரை பெற்ற உயரிய விருதுகள்

1. 2016 ல் சவுதி அரேபியாவின் ' ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது2. 2016 ல் ஆப்கனின் 'ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்' விருது3. 2018 ல் பாலஸ்தீனத்தின் ' கிராண்ட் காலர்' விருது4. 2019 ல் ஐக்கிய அரபு எமிரேட்சின் 'ஆர்டர் ஆப் ஜாயீத்' 5.2019 ல் ரஷ்யாவின் ‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ' விருது 6. 2019 ல் மாலத்தீவின் 'ஆர்டர் ஆப் தி டிஸ்டின்குயிஷ்ட் ரூல் ஆப் நிசான் இசுதீன்' விருது7. 2019ல் பஹ்ரைனின் 'அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான' விருது 8. 2020ல் அமெரிக்காவின் 'லிஜியன் ஆப் மெரிட்' என்ற விருது9. 2023 ல் பலாவு குடியரசின் 'எபகல்' விருது10.2023 ல் பிஜி நாட்டின் 'கம்பேனியன் ஆப் ஆர்டர் ஆப் பிஜி' விருது11. 2023ல் பப்புவா நியூ கினியாவின் 'கிராண்ட் கம்பானியன் ஆப் லோகோஹு' விருது12. 2023ல் எகிப்தின் 'ஆர்டர் ஆப் நைல் '13. 2023ல் பிரான்சின் 'லிஜியன் ஆப் ஹானர்' விருது14. 2023 ல் கிரீசின் ' ஆர்டர் ஆப் ஹானர்' விருது15. 2024 ல் பூடானின் 'ஆர்டர் ஆப் தி டிராகன் கிங்'16. 2024 ல் நைஜீரியாவின் 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்' விருது17. 2024 டொமினிகாவின் 'ஹானர் ஆப் டொமினிகா ' விருது18. 2024 ல் கயானாவின் ' ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் ' விருது.19. 2024 ல் பார்படாசின் ' ஹானோரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ்' விருது20. 2024ல் குவைத்தின் 'ஆர்டர் ஆப் முபாரக்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nagendhiran
டிச 23, 2024 06:32

அசல் அசல்தான்


RAAJ
டிச 23, 2024 06:31

வாழ்த்துக்கள் மோடிஜி. அரசியல் பாரபட்சம் இல்லாமல் எல்லா கட்சி தலைவர்களும் வாழ்த்துச் சொல்ல வேண்டும்.


Bala
டிச 22, 2024 21:25

பாரத பிரதமர் திரு மோடி அவர்களை குஜராத் மாநில முதல்வராக இருந்த பொது Merchant of death என்று கூப்பாடு போட்டார்கள் எதிர்க்கட்சிகள். ஆனால் 2014 இல் பாரத பிரதமராக மக்களால் தேர்தெடுக்கப்பட்டதில் இருந்து இன்று வரை பத்தாண்டுகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த ஒரு மத கலவரமும் நிகழவில்லை. திரு மோடி அவர்கள் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த பொறுப்பில் இருந்தும்கூட எந்த ஒரு கலவரமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழவில்லை. அதுமட்டுமல்ல மோடி அவர்கள் பெருந்தொற்று காலகட்டத்தில் நம் தாய்நாட்டு மக்களை பெருமளவு காத்ததுடன், மற்ற பிற மதிய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிற்கு தடுப்பூசிகள் இலவசமாக அனுப்பி பல உயிர்களை காத்துள்ளார். பெரும்பான்மை இந்துக்கள் ஆன்மீகவாதிகள், அடிப்படையில் அமைதியை விரும்புபவர்கள், மக்களுக்கு நன்மையே செய்பவர்கள் என்பதற்கு திரு மோடி அவர்களே சாட்சி. இதுபோல் மேலும் நம் தாய்நாட்டுக்கும் இதர பிற நாடுகளுக்கும் நன்மையை செய்ய, நம் பிரதமர் அவர்கள் உழைக்க எல்லாம் வல்ல ஆண்டவன் அவருக்கு பேரருள் செய்ய வேண்டுகிறேன்


SUBBU,
டிச 22, 2024 20:24

சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் மன்னர் குடும்பத்தின் ஒரு பெண் வாரிசு ஒருவர் காதல் வலையில் விழுந்து மூளைச்சலவை செய்யப்பட்டு அந்த நாட்டிலிருந்து ஒருசில நபர்களுடன் வேறொரு நாட்டிற்கு கடல் மார்க்கமாக தப்பி செல்லும் போது அப்போது குவைத் மன்னர் குடும்பத்தினர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுத்தரும்படி வேறு எந்த நாட்டு உதவியையும் கோராமல் வெளியே தெரிந்தால் களேபரம் ஆகிவிடும் என எண்ணி முதலில் உதவியை கோரியது நம் பாரத பிரதமர் மோடியிடம்தான். அதே போல் நம் கடற்படை உதவியுடன் அந்த மன்னர் குடும்பத்து பெண் பத்திரமாக மீட்கப் பட்டு குவைத்துக்கே அனுப்பி வைக்கப் பட்டார். அவரை கடத்தியவர்கள் இரண்டொரு நாளில் குவைத் நாட்டிடம் ஒப்படைக்கப் பட்டனர். காதும் காதும் வைத்தது போல் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த நம் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு மன்னர் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அதன் பிறகு மோடியின் மேல் குவைத் மன்னருக்கு நம்பிக்கையும் பாசமும் அதிகரித்து விட்டது அதிலிருந்து குவைத் இந்தியாவுடன் மிகவும் நட்பு பாராட்ட ஆரம்பித்தது அதன் விளைவுதான் மோடிக்கு அவர்கள் கொடுத்த இந்த உயரிய விருது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 19:14

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆயிரக்கணக்கில் சிறுபான்மையினர் கொல்லப்படுவார்கள் என்று ராகுல் 2014 இல் பிரச்சாரம் செய்தார் ..... சிறுபான்மையினர் மனங்களில் அப்படி ஒரு அச்சம் தோற்றுவிக்கப்பட்டது .... அது மட்டுமல்ல .... உலகத்தின் பல நாடுகள், குறிப்பாக வளைகுடா நாடுகள் பாஜக மீது அவநம்பிக்கை கொண்டன .... ஆனால் அனைத்து மதத்தினரையும் அரவனைத்துச் செல்வதால் வளைகுடா நாடுகள் உண்மையைப் புரிந்து கொண்டன .... அதன் விளைவுதான் இது .....


SUBBU,MADURAI
டிச 22, 2024 20:05

அருமையான கருத்து பாராட்டுக்கள் தர்மா.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 05:58

நன்றி சுப்பு சார் ..... உங்களுடைய மற்றும் குறிப்பிட்ட சிலர் பதிவு செய்யும் தெள்ளத் தெளிவான, செறிவுடைய, அரசியல் முதிர்ச்சியை வெளிக்காட்டும் கருத்துக்கள் போல எழுத முயற்சிக்கிறேன் ....


ராமகிருஷ்ணன்
டிச 23, 2024 07:12

உண்மை என்ன. காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பெரும்பான்மை இந்துக்களை துரோகம், அவமானம் கேவலம் செய்தது காங்கிரஸ். இந்துக்களின் சொத்துக்களை புடுங்கி முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்துக்களுக்கு காங்கிரஸின் கோர முகம் என்றும் நினைவில் நிற்கும்.


nagendhiran
டிச 22, 2024 18:21

அசலுக்கு தெரிகிறது மோடியின் அருமை? போலிகளுக்குதான் தெரிவதில்லை போலும்?


RAMESH KUMAR R V
டிச 22, 2024 17:02

கிரேட்


சாண்டில்யன்
டிச 22, 2024 16:38

மன்னர் அவர் கவுரவத்துக்கு ஏத்தாப்புல பிரேம் போட்டு கொடுத்திருக்கார்


arumugam
டிச 22, 2024 16:28

விரைவில் கின்னஸ் சாதனை எட்டப் படும்.


G Mahalingam
டிச 22, 2024 16:06

இஸ்லாமிய இயக்கங்களுக்கு காங்கிரஸ் திமுக பலருக்கு வயிறு எரியும். இஸ்லாமிய நாடுகளுக்கு தெரியுது மோடி எல்லோருக்கும் எல்லாம், சாதி மதம் பார்க்காமல் அத்தனை பேருக்கும் அரசு உதவிகள் கிடைக்கிறது.


சமீபத்திய செய்தி