உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வழியனுப்பிய குவைத் பிரதமர்

விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வழியனுப்பிய குவைத் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத் சிட்டி: பிரதமர் மோடியை, குவைத் பிரதமர் ஷேக் அஹமத் அல் அப்துல்லா அல் அஹமத் அல் சபா விமான நிலையத்திற்கே வந்து வழியனுப்பி வைத்தார்.அரசு முறை பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடிக்கு இன்று, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த பயணத்தின் போது, குவைத்தின் உயரிய விருதான ' ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' வழங்கப்பட்டது.இதன் பிறகு அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள், பல துறையைச் சேர்ந்தவர்கள் மோடியை சந்தித்து பேசினர் குவைத் பிரதமர் ஷேக் அஹமத் அல் அப்துல்லா அல் அஹமத் அல் சபாவையும் சந்தித்து மோடி பேசினார். அப்போது, இந்தியா வர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டில்லி கிளம்பினார். அவரை கவுரவிக்கும் வகையில், குவைத் பிரதமர் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 10:44

இஸ்லாமியர்கள் யாரும் மோடியை அல்லது பாஜக வை, குடுமி என்றோ, பட்ட, கொட்ட, நாமம் என்றோ விமர்சிப்பதில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக வினர் தான் மூர்க்ஸ், .. என்றெல்லாம் பேர் வெச்சு விமர்சனம் செய்கிறார்கள். உள்ளூர் இஸ்லாமியர்களை அவமதித்து விட்டு குவைத் போயிட்டு வர கூச்சமா இல்லியா?


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 10:40

எதுக்கு போனாருன்னு எழுத எந்த கொத்தடிமைக்கும் கை வரல.


Kasimani Baskaran
டிச 23, 2024 07:52

வெளியூர் இஸ்லாமியர்கள் மோடியை மதிக்கிறார்கள், பல விருத்திகள் கொடுத்து மகிழ்கிறார்கள். ஆனால் உள்ளூர் இஸ்லாமியர்களுக்கு அவரது அருமை தெரியவில்லை என்பது துரதிஸ்டவசமானது.


arumugam
டிச 23, 2024 07:52

இந்தியா வல்லரசு ஆகிவிட்டது. பாலாறு ஓடும். மக்கள் குடம் சொம்போடு தயாராக தயாராக இருக்கவும்.


N Sasikumar Yadhav
டிச 23, 2024 08:01

திராவிடன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை என்கிற பழமொழி இருக்கிறதே


veera
டிச 23, 2024 08:16

முதல் வரிசையில் ஆறுமுகம் வரவும்


RAMAKRISHNAN NATESAN
டிச 23, 2024 08:29

நாடு துண்டு துண்டாகவேண்டும் என்று நாவைத் தொங்கப்போட்டு காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும்தான் இருக்கும் ....


N.Purushothaman
டிச 23, 2024 07:14

மோதி ஜி அவர்கள் அயலுறவு விஷயத்தில் ஒரு முன்மாதிரியான அடிப்படையை உருவாக்கி விட்டார் ...எதிர்காலத்தில் பிரதமராக வருபவர்கள் அந்த வழியில் பயணித்து இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் ...


அப்பாவி
டிச 23, 2024 07:11

குவைத் சிட்டி சென்னையை விட சிறியது. எப்படிப் போனாலும் சுத்தி சுத்தி ஏர்போர்ட்டுக்குத்தான் வரணும்.


A. Muthu
டிச 22, 2024 22:22

அரசியல் கடந்த பெருமைமிகு தருணம்.


முக்கிய வீடியோ